குற்றவாளிகளிகளை கண்காணித்து குற்றசம்பவங்களை தடுப்பதற்கான ஒரு முயற்சியை தமிழக காவல்துறையினர் எடுத்துள்ளனர். முன்பெல்லாம் குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் பற்றிய விவரங்களை திரட்டி உயரதிகாரிகளுக்கு அறிக்கை கொடுப்பதென்பது சவாலானப் பணியாக இருந்து வந்தது. ஒரு குற்றவாளியை பற்றிய விவரங்கள் மற்றும் அவர்கள் பற்றிய கண்காணிப்பு தகவல்களை திரட்டி அறிக்கை கொடுக்க குறைந்தது 3 லிருந்து 5 தினங்கள் ஆகும். இவற்றை குறைத்து உடனுக்குடன் குற்றவாளிகளை கண்காணிக்க தமிழக காவல்துறையினரால் TracKD என்ற மொபைல் செயலி கடந்த நவம்பர் 25 ம் தேதி அறிமுகப்பட்டது.
தற்போதைய சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா கடந்த ஆண்டு மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்த போது இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட்டு தற்போது தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, அதன் மூலம் குற்றவாளிகளின் தின மற்றும் வார நடவடிக்கைகளை நேரடியாக கண்காணித்து ஆய்வு செய்ய உருவாக்கப்பட்டதே TracKD மொபைல் செயலி.
தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட A, A, B உள்ளிட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை காவல் அதிகாரிகள் நேரில் சென்று அவர்கள் பற்றிய விவரங்களை இந்த செயலியில் அப்டேட் செய்ய வேண்டும். தினந்தோறும் எத்தனை குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர் என்பது பற்றிய விவரங்கள் உடனுக்குடன் காவல் உயரதிகாரிகள் தெரிந்துக்கொள்ளுமாறு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பற்றிய குற்றப்பத்திரிக்கை விபரங்கள், தமிழகத்திலுள்ள ரவுடிகளின் எண்ணிக்கை, நன்னடத்தை பிரிவுகளின் கீழ் எத்தனை பேர் பிணைக்கப்பட்டுள்ளனர். பிணை பத்திரங்களின் காலாவதி தொடர்பான எச்சரிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகள், வழக்கு விசாரணை, குற்றத்தின் வகைகள் உள்ளிட்ட விவரங்களை தமிழகத்திலுள்ள காவல் அதிகாரிகள் உடனுக்குடன் இந்த செயலியின் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.
தமிழகத்திலுள்ள 39 மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் தற்போது வரை 30,100 குற்றவாளிகள் பற்றிய முழு விவரங்களும் இந்த செயலியில் டிஜிட்டல் முறையில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், குற்ற சம்பவம் மற்றும் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மற்றும் ரவுடிகளின் விவரங்கள் தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்யப்படும்.
Also see...பெற்ற குழந்தைக்கு பால்தர முடியாததால் தாய் தற்கொலை செய்துகொண்ட சோகம்!
இதனால் குற்றவாளிகளை கண்காணிப்பதில் இருந்த சிக்கல் தற்போது நீக்கப்பட்டுள்ளுதாகவும், TracKD செயலியின் மூலம் குற்றவாளிகள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு குற்ற சம்பவங்களை தடுக்க தமிழக காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Digital India, Police, Tamil Nadu