Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'அது வாஜ்பாயின் கனவுத்திட்டம்.. முதலமைச்சர் கூறியதில் உண்மையில்லை'.. அண்ணாமலை குற்றச்சாட்டு

'அது வாஜ்பாயின் கனவுத்திட்டம்.. முதலமைச்சர் கூறியதில் உண்மையில்லை'.. அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணாமலை

அண்ணாமலை

தங்க நாற்கர சாலையை டி.ஆர்.பாலு அமைத்து தந்ததாக முதலமைச்சர் கூறியிருப்பதில் உண்மையில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய "பாதை மாறா பயணம்" நூல் வெளியிட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு தங்கநாற்கர சாலையை அமைத்துத் தந்தவர் டி.ஆர்.பாலு என்று புகழாரம் சூட்டினார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பேசியதற்கு பதில் அளித்துள்ளார். தங்க நாற்கர சாலைத் திட்டம் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவுத் திட்டம் என்று உலகத்துக்கே தெரியும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை 1999ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பி.சி.கந்தூரி தொடங்கி வைத்ததாகவும், சென்னை-கொல்கத்தா இடையே இந்தத் திட்டம் 2013ம் ஆண்டு மே 31ம் தேதி நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக 2004ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையே டி.ஆர்.பாலு இருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார். எனவே, திட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இல்லாமல் இடைப்பட்ட காலத்திலேயே அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, எப்படி தனது சாதனையாகக் கூற முடியும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, MK Stalin