தமிழகத்தின் நச்சுத்தன்மை அதிகமுள்ள பால் விநியோகம் - மத்திய அமைச்சர் பகீர் தகவல்

தமிழகத்தின் நச்சுத்தன்மை அதிகமுள்ள பால் விநியோகம் - மத்திய அமைச்சர் பகீர் தகவல்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 22, 2019, 3:55 PM IST
  • Share this:
தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விநியோகம் செய்யப்படும் பாலில், நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையின் இன்றைய அலுவலின் போது, திமுக எம்.பி டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்ளாடோக்சின் எம்1 என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.

நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.


தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தது, உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: November 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com