• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வைகை ஆற்றில் ஆளுயுரத்திற்கு பொங்கிய நுரையால் பொதுமக்கள் அச்சம் - வைரல் வீடியோ

வைகை ஆற்றில் ஆளுயுரத்திற்கு பொங்கிய நுரையால் பொதுமக்கள் அச்சம் - வைரல் வீடியோ

வைகை ஆற்றில் பெருகெடுத்த நுரை

வைகை ஆற்றில் பெருகெடுத்த நுரை

நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி காட்சியளித்தோடு, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் ஆளுயரத்திற்கு நுரை பொங்கி நிற்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  • Share this:
மதுரையில் பெய்த கன மழையால் வைகை ஆற்றின் தடுப்பணைகளில் நிரம்பிய நீரால் ஆளுயரத்தில் நுரை பொங்கியதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது.

மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் கனமழை பெய்ததன் காரணமாக வைகை ஆற்றில் மழை நீர்வரத்து அதிகமானது. இதையடுத்து மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள தடுப்பணைகள் மழைநீரால் நிரம்பிய நிலையில் தண்ணீர் செல்ல வேண்டிய பகுதியில் முழுவதிலுமாக ஆகாயதாமரை செடிகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் தண்ணீர் நிரம்பி தரைப்பாலத்தில் தண்ணீர் ஓட தொடங்கியது.

மேலும் தடுப்பணையில் உள்ள நீரில் முழுவதிலுமாக நுரை பொங்கி காட்சியளித்தோடு, வைகை ஆற்றோர பகுதிகளான செல்லூர், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளிலும் ஆளுயரத்திற்கு நுரை பொங்கி நிற்பதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல கோடி ரூபாய்க்கு திட்டங்கள் செயல்படுத்தபட்ட வரும் நிலையில் மீண்டும் சாக்கடை நீர் வைகையாற்றில் கலப்பதால் நுரை பொங்குகிறதா இல்லையெனில் ரசாயனம் ஏதும் கலந்து நுரை பொங்குகிறதா என நீர்நிலை ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.



தற்போது மழை காலம் என்பதால் வைகை ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. வைகை ஆற்றில் அதிகரித்துள்ள நுரையை அகற்றுவதற்காக தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்து வருகின்றனர், இதனால் இப்பகுதியில் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.



வைகை ஆறு லண்டன் தேம்ஸ் நதி போல் மாற்றப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்த நிலையில் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர் காரணமாக ஆளுயுரத்திற்கு நுரை பொங்கி வருவது அனைவரிடமும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: