Home /News /tamil-nadu /

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - 4 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - 4 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
    வார விடுமுறை மற்றும் கோடை சீசனையொட்டி கொடைக்கானல் மலைக்கு படையெடுத்துள்ள சுற்றுலாப் பயணிகளால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில், கோடை சீசன் மற்றும் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக வெள்ளிநீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவி, அருங்காட்சிய‌க‌ம், சிட்டிவியூ உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    இதனால் நகரின் முக்கியப் பகுதிகளான மூஞ்சிக்கல், சீனிவாசபுரம், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    Also read... பூக்களால் உருவாக்கப்பட்ட வீடு.. கண்ணை கவரும் உதகை ரோஜா மலர் கண்காட்சி!

    இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், வார விடுமுறை நாட்களில், கூடுதல் காவலர்களை கொண்டு போக்குவரத்தை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    -செய்தியாளர்: ஜாப‌ர்சாதிக்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Kodaikanal

    அடுத்த செய்தி