பெண்கள் கழிப்பறையை எட்டிப் பார்த்த இளைஞரை சரமாரியாக அடித்த சுற்றுலா பயணிகள்

மாதிரிப்படம்.

கொடைக்கானல் தனியார் விடுதியில், கேரளப் பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்றதை கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்த இளைஞரை சுற்றுலாப் பயணிகள் சரமாரியாக அடித்து தாக்கினர். நடந்தது என்ன?

 • Share this:
  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே தனியார் உணவு விடுதி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு திங்கட்கிழமை சுற்றுலாவிற்கு வந்திருந்தனர். அவர்கள், அந்த விடுதியில் தங்கியபடி கொடைக்கானலைச் சுற்றிப் பார்த்துள்ளனர். திங்கட்கிழமை காலையில் உணவருந்தி விட்டு வெளியே வந்தனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், விடுதியின் கழிவறைக்கு சென்றுள்ளார்.

  அப்போது உணவு விடுதியில் பணிபுரியும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான நம்ஜித் ராஜ் பார்த்து விட்டு பின்னாலேயே சென்றுள்ளார்; அங்குள்ள கண்ணாடி வழியாக எட்டியும் பார்த்துள்ளார். அதைப் பார்த்த கேரளப் பெண், அதிர்ச்சியடைந்து வெளியே வந்து நம்ஜித் ராஜிடம் கேட்டபோது மன்னிக்கும்படி கூறியுள்ளார்.

  மேலும் படிக்க... திருப்பத்தூரில் 5 கோடி ரூபாய் சீட்டு மோசடி செய்தவர்களை வழிமறித்து அடித்த வாடிக்கையாளர்கள்

  ஆத்திரமடைந்த இளம்பெண் தனது குடும்பத்தினரிடம் கூறவே, அவர்கள், இளைஞர் நம்ஜித் ராஜைப் பிடித்து குடும்பத்தினரும் சுற்றுலா பயணிகளும் சரமாரியாக அடித்தனர். பின்னர் இளம்பெண்ணின் காலில் விழவைத்து மன்னிப்புக் கோரும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் இளம்பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரைப் பிடித்து கொடைக்கானல் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நம்ஜித் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து அனுப்பினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: