குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!

குற்றால அருவியில் காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

news18
Updated: August 14, 2019, 11:36 AM IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி!
குற்றாலம்
news18
Updated: August 14, 2019, 11:36 AM IST
குற்றால அருவியில் காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் வந்ததால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்திருந்தனர்.

குற்றால அருவியில் காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயனிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிய்டைந்துள்ளனர்.

இதேபோல் தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

Also watch

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...