ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி..!

திற்பரப்பு அருவி

திற்பரப்பு அருவி

இன்று முதல் மீண்டும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் அனுமதி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்து வந்தது.மேலும் மலையோர பகுதியான பேச்சிப்பாறை பெருஞ்சாணி கோதையாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை, அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை  எட்டும் அளவிற்கு வந்தது.இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால்  கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.கடந்த மூன்று நாள்களாக அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைக்கு வரக்கூடிய நீரின் அளவும் குறைந்துள்ளது இதனால் கோதையாற்றில் மிதமான வெள்ளம் பாய்கிறது.இதையடுத்து இன்று முதல் மீண்டும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Kanyakumari, Tamil News, Tamilnadu, Tourism, Tourist spots, Water