இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே இரு சக்கர வாகன துறை பழையபடி வளர்ச்சி கண்டு வருகிறது. ஒருபக்கம் எலெக்ட்ரிக் டூவீலர்களின் படையெடுப்பு இருந்தாலும் முன்னணி தயாரிப்பாளர்களின் டூவீலர் வருகை மக்களை கவர தவறவில்லை. எனவே வரவிருக்கும் 2022-ல் என்ட்ரி-லெவல் ப்ரீமியம் மற்றும் ப்ரீமியம் ரேஞ்ச் பைக்குகளின் சுவாரஸ்யமான அறிமுகத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த வகையில் வரும் 2022-ஆம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ, ராயல் என்ஃபீல்டு, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பல பைக் தயாரிப்பாளர்களிடமிருந்து சில முக்கிய பைக்குகள் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் புதிய ஆண்டு இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் ப்ரீமியம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் பட்டியல் இங்கே...
ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411):
சென்னையை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இந்தியாவில் பிரபலமான ஹிமாலயன் ஏடிவி (Himalayan ADV)-யின் புதிய மற்றும் மலிவான வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக் இமாலயன் மாடல் பைக்கை விட அதிக சாலை சார்ந்த மாடலாக வரும் பிப்ரவரி 2022-ல் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
ALSO READ | குருவாயூர் கோவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட புத்தம் புதிய எஸ்யூவி
கேடிஎம் ஆர்சி 390 நியூ-ஜென் (KTM RC 390 (new-gen) ):
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் KTM RC 390 என்ற இந்த புதிய தலைமுறை ஸ்போர்ட் பைக்குகளை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் KTM RC 390 பைக்கின் அறிமுகம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறன. இந்த புதிய பைக் சற்று விலை அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இந்த பைக்கில் 373cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மற்றும் 6 ஸ்பீட் கியர் பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350):
சென்னையை தளமாக கொண்ட வாகன தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411 பைக்கை அறிமுகப்படுத்திய பின் தனது புதிய ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. 2022-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஹண்டர் 350 பைக்கை நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக் Meteor 350-ஐ அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் மற்றும் அதே எஞ்சின் மற்றும் பிளாட் பிளாட்ஃபார்மை பயன்படுத்தும்.
ALSO READ | விற்பனை துவங்கிய 2 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 650 ட்வின்ஸ் அனிவர்சரி எடிஷன்... ராயல் என்ஃபீல்டு சாதனை
டிவிஎஸ் செப்லின் குரூஸர் (TVS Zeppelin cruiser):
ஓசூரை தளமாக கொண்ட ஆட்டோமேக்கரான டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய Zeppelin cruiser எப்போதும் அறிமுகப்படுத்தப்படும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், 2022-ஆம் ஆண்டின் மத்தியில்இந்த புதிய பைக்கை TVS நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் எஸ்ஜி 650 (Royal Enfield Shotgun (SG 650) ):
EICMA-ல் கடந்த மாதம் தான் SG 650-ன் மாதிரியை ராயல் என்ஃபீல்டு காட்சிப்படுத்தியது. தற்போதுள்ள 650 ட்வின்ஸ்-ல் உள்ள அதே 650 சிசி பிளாட்ஃபார்மின் அடிப்படையில் இது வரும். 2022-ஆம் ஆண்டு பண்டிகை காலத்தில் இந்த பைக் இந்தியாவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.