துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். இந்த பயணத்தின் போது துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன.
-மேலும் படிக்க
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 103 ரூபாய் 67 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 93 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. -
மேலும் படிக்க
வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், எஸ்.பி.க்கு தகவல்களை விரைவாக தெரிவிக்காத காவலர்கள் 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் உணவகத்தில் நிறுத்தம் செய்ய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது.
- மேலும் படிக்க
10 நிமிடத்தில் உணவு டெலிவரி என்ற ஜொமேட்டோ நிறுவனத்தின் புதிய அறிவிப்பு சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துடன் ஆலோசனை நடத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.
- மேலும் படிக்க
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி, நளினி தொடர்ந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. -
மேலும் படிக்க
உக்ரைனில் நிலவும் மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கக் கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யா கொண்டு வந்த வரைவு தீர்மானம் தோல்வியை தழுவியது. ரஷ்யாவின் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில். இப்போரில் ரஷ்யா மெல்ல மெல்ல தோல்வியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
- மேலும் படிக்க
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்துள்ளார். புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
- மேலும் படிக்கஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.