Home /News /tamil-nadu /

Headlines Today : தமிழ் புத்தாண்டு பிறப்பு - பொருளாதார நெருக்கடி - ப. சிதம்பரம் எச்சரிக்கை - இன்றைய தலைப்புச் செய்திகள் ( ஏப்ரல் 14, 2022)

Headlines Today : தமிழ் புத்தாண்டு பிறப்பு - பொருளாதார நெருக்கடி - ப. சிதம்பரம் எச்சரிக்கை - இன்றைய தலைப்புச் செய்திகள் ( ஏப்ரல் 14, 2022)

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

Headlines Today : தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

  ‘சுப கிருது’ தமிழ் புத்தாண்டு பிறந்தததை ஒட்டி கோவில்களில் மக்கள் வழிபாடு நடத்திவருகின்றனர்.

  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் தமிழ் கடவுள் முருகனுக்கு வழிபாடு செய்து இவ்வருடத்தின் முதல் நாளை கொண்டாடினர்.

  தமிழ்ப்புத்தாண்டை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்திருந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளன.

  மதுரை மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

  சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், மதுரை வந்தடைந்தது.

  குருபெயர்ச்சியை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற தட்சணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  தொடர்ந்து 8வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

  உலகம் முழுவதும் 10 ஆயிரம் திரைகளில் இன்று கே.ஜி.எஃப். 2 படம் வெளியாகிறது.

  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

  கோவையில் ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாட்டி வைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

  தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.

  விலைவாசி உயர்வுக்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் காரணம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

  தெலங்கானாவில், விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

  மத கலவரத்தை துாண்டியதாக, காங்கிரஸ் எம்.பி., திக்விஜய் சிங் மீது, மேலும் 4 வழக்குகளை, மத்தியபிரதேச போலீசார் பதிவு செய்துள்ளனர்.

  ராஜஸ்தானில் வன்முறை நிகழ்ந்த கராவ்லி பகுதிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 6-வது நாளாக நீடிக்கிறது. உலக நாடுகளிடம் இருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற உதவ வேண்டும் என்று இலங்கை அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

  உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ரஷ்ய படையினர் தங்களது நாட்டின் பீரங்கிகளையே தாக்கி அழித்து சொந்த நாட்டு வீரர்களை கொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ரஷ்யாவில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனத்தை மூட இருப்பதாகவும், அங்கு அனைத்து வணிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்குள்ள இந்திய துணை துாதரகம் மூடப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Top News

  அடுத்த செய்தி