இலங்கை சிறையிலுள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் பிணைத்தொகையாக தலா ஒரு கோடி செலுத்தினால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என்று கிளிநொச்சி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கான 10. 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். 2024ஆம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு தனது அமைச்சரவை முற்றிலும் மாற்றி அமைக்கிறார் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பழைய குற்றாலம் அருகே ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயில் அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.
தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் காலணி தொழிற்சாலை, தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைய உள்ளதாக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த உத்தரவு செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் இம்ரான் கான் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
கனடாவில் மான்களுக்கு ஏற்பட்ட ஜாம்பீ வகை நோய், அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா போன்ற நோய்களைப் போல், மனிதர்களுக்கு பரவிவிடுமோ என்ற அச்சம் நிலவிவருகிறது.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கும், எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட, விலைவாசி கடுமையாக ஏறியுள்ளது. பிரதமரும், அதிபரும் பதவி விலக வலியுறுத்தி இலங்கையின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.