தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. -
மேலும் படிக்க
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது
செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடியதில் 17 வயது மாணவன் மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கடைகளில் தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக கொரோனாவின் புதிய திரிபான ஓமைக்ரான் XE மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. புதிய திரிபான எக்ஸ்இ முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. -
மேலும் படிக்க
உணவு விநியோகிக்கும் நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோவின் செயலிகள் நாடு முழுவதும் திடீரென முடங்கின.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸின் வாணவேடிக்கையால் மும்பை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. -
மேலும் படிக்க
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண மூவர் கொண்ட ஆலோசனை குழுவை நியமித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிடும் உத்தரவினை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட யாரையும் பொது வெளியில் விமர்சிக்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- மேலும் படிக்க
நீட் தேர்வு எழுதுவதற்கான நேரத்தை நீடித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.