மதுரையில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது. மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள், சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நகர்ப்புறங்களில் சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வமும், திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கின்றனர்.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.9 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து, நூறு ரூபாயைக் கடந்து, 100.18 ரூபாயக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் 4 ஆயிரத்து 805 கோடி ரூபாய் அளவில் 97 சதவீதம் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட இருப்பதாக, சென்னை பெருநகர டீ கடை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் சுந்தரம் கூறியிருக்கிறார்
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் பிணங்கள் சிதறி கிடந்தது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுக்கு ரஷ்யா உக்ரைன் போர் முக்கிய காரணமாக இருந்த நிலையில், போர் இன்னும் முடிவடையாத நிலையிலும் கூட, பல்வேறு காரணிகளால், பங்குச்சந்தைகளில் வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இதில், அரசுக்கு எதிராக குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும், முக்கிய அறிவிப்பை முன்னாள் அதிபர் சிறிசேனா வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு போர்க் குற்றவாளி என்றும், அவருக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், இடைக்கால பிரதமராக குல்சார் அகமதுவை நியமிக்க பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.