டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. - மேலும் படிக்க
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். - மேலும் படிக்க
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்றிரவு டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து பேசுகிறார். - மேலும் படிக்க
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் பதவியேற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. - மேலும் படிக்க
சென்னை ஐ.ஐ.டி.-ல் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆராய்ச்சி மாணவர்கள் 2 பேர் மற்றும் பேராசிரியர் ஒருவரிடம் மயிலாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 4 பேரை, காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். - மேலும் படிக்க
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு பள்ளியில் மாணவி கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். - மேலும் படிக்க
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் பரிவர்த்தனை முடங்கியது.
அஸ்ஸாம் - மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தில் இரு மாநில முதல்வர்களும் கையெழுத்திட்டுள்ளனர். - மேலும் படிக்க
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
உக்ரைனில் தலைநகர் கீவ்-வைச் சுற்றியுள்ள பகுதிகளில் படைகளைக் குறைப்பதாக கூறிவிட்டு ரஷ்யா ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, Headlines, IPL 2022, MK Stalin, Russia - Ukraine, Tamil News, TNPSC