துபாய் மற்றும் அபுதாபியில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, முதலமைச்சர்
ஸ்டாலின் தமிழகம் வந்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 6 முக்கிய நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்று கூறினார்.
- மேலும் படிக்க
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- மேலும் படிக்க
114 ஆண்டுகள் பழமையான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 450 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதற்கான் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இன்று நடைபெற உள்ளது
மேற்கு வங்க சட்டசபையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் ஏற்பட்ட மோதல் கைகலப்பில் முடிந்தது. இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரி உட்பட 5 பேரை மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்ளிட்ட 54 பேருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார்.
இந்தியாவில் முப்படைகளில் 10,303 பெண் அதிகாரிகள் பணியாற்றி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 68 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் ஸ்ரீராம்பூரில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கெமிக்கல் பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2015-16ஆம் கல்வியாண்டு முதல் தொலைநிலைக் கல்வியில் பெற்ற பட்டங்கள் செல்லாது என, பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியது.
- மேலும் படிக்க
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக விமானத்தில் பயணிக்கக் கூடாது என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
- மேலும் படிக்க இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.