முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Headlines Today: மீண்டும் உயரும் ஜிஎஸ்டி?.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை - இன்றைய தலைப்புச் செய்திகள்

Headlines Today: மீண்டும் உயரும் ஜிஎஸ்டி?.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை - இன்றைய தலைப்புச் செய்திகள்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வேலூரில் பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

  • Last Updated :

சரக்கு மற்றும் சேவை வரியை முடிவு செய்யும் ஜிஎஸ்டி கவுன்சில் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதில், 143 வகையான பொருட்கள் மீதான ஜிஎஸ்டி-யை உயர்த்தலாமா என கருத்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

அறந்தாங்கி அருகே ஆவுடையார்பட்டினத்தில் தொழிலதிபரை கழுத்தை அறுத்துக் சொலை செய்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்து 100 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோவையில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில், திருநங் கை மற்றும் திருநம்பிகள் உற்சாகமாக கலந்துகொண்டு, இலக்கை நோக்கி ஓடினர். விளையாட்டுத் துறையிலும் திருநங்கை, திருநம்பிகள் சாதிக்கும் நோக்கில், தமிழகத்தில் முதன் முறையாக டிரான்ஸ் மாரத்தான் என்ற பெயரில் கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 14 நாட்களில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் பெண் மருத்துவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வேலூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் உள்ள மேஜை. நாற்காலிகளை உடைக்கும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சீன நாட்டினருக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சீன நாட்டினருக்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால சுற்றுலா விசாவை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: Corona, GST, GST council, Headlines, MK Stalin, Tamil News, Tamilnadu, Today news, Top News