Home /News /tamil-nadu /

Headlines Today: தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல் ஐபிஎல் RCB வெற்றி வரை - இன்றைய முக்கியச் செய்திகள் ( ஏப்ரல் 06, 2022)

Headlines Today: தமிழக சட்டப்பேரவை கூட்டம் முதல் ஐபிஎல் RCB வெற்றி வரை - இன்றைய முக்கியச் செய்திகள் ( ஏப்ரல் 06, 2022)

தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றியை பதிவுசெய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சி என்பது கட்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் அவசியம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆளுநர் ரவி உறுதியளித்தாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    சென்னையில் 2000 பேருந்துகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளில் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

    மூலப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.

    காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும் பார்களை ஆறு மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைகால தடை விதித்துள்ளது.

    சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், டீசல் சாலையில் கொட்டி வீணாகின

    வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டப்படும் என்று பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி 2-வது வெற்றியை பதிவுசெய்துள்ளது. - மேலும் படிக்க

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Bangaluru, CCTV, Chennai, Congress, Dinesh Karthik, Headlines, Imran khan, IPL 2022, MK Stalin, RCB, Russia - Ukraine, Sonia Gandhi, Tamil News, Tamilnadu, Virat Kohli

    அடுத்த செய்தி