முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Headlines Today | பெட்ரோல் டீசல் விலை உயர்வு முதல் CSK ஹாட்ரிக் தோல்வி வரை - இன்றைய தலைப்பு செய்திகள்

Headlines Today | பெட்ரோல் டீசல் விலை உயர்வு முதல் CSK ஹாட்ரிக் தோல்வி வரை - இன்றைய தலைப்பு செய்திகள்

தலைப்புச் செய்திகள்

தலைப்புச் செய்திகள்

IPL 2022 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து 109 ரூபாய் 34 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்த்தப்பட்டு 99 ரூபாய் 42 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. - மேலும் படிக்க 

தமிழ்நாட்டில் ஓன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை நடப்பாண்டு இறுதித் தேர்வு கிடையாது என்று செய்தி வெளியான நிலையில், நிச்சயம் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்துவரி உயர்வை முதலமைச்சர் ஸ்டாலின் திரும்பப்பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். - மேலும் படிக்க

தமிழுக்கு மரியாதை கொடுப்பவர்களை, தமிழ் வாழவைக்கும் என்று, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பட்டப்பகலில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாதவரத்தில் இளம்பெண்ணை ஆபாச வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைனின் ஒடெசா பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது ரஷ்யா பெரும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. கருங்கடல் அருகேயுள்ள ஒடெசா நகரத்தை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலால், அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்தத் தாக்குதலால் உக்ரைன் ராணுவத்தினருக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட் திரை நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் - அலியா பட் இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. 

ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. - மேலும் படிக்க

First published:

Tags: Anbil Mahesh Poyyamozhi, Chennai, Chennai Super Kings, Headlines, IPL 2022, Petrol Diesel Price hike, Punjab Kings, Russia - Ukraine, Srilanka, Tamil News, Tamilisai