வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உள் ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லி, தமிழ் நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடத்தினர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 27-ம் தேதி மாமல்லபுரத்தில், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கவுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஊதியம் வழங்குவதற்காக 949 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் வரும் 2ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட வரம்பு பகுதிகள் குறைக்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கொரோன தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நேற்றுடன் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் 3 மாதம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
திருமணமே செய்துகொள்ளாத பெண்ணும் தனது பெற்றோரிடம் திருமண செலவினை கோரலாம் என, சத்திஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதிய நிதியாண்டு தொடங்கியதைத் தொடர்ந்து அத்தியாவசிய மருந்துகள், கார் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி போராடி தோல்வியடைந்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதைக் கண்டித்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டின் முன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.