Home /News /tamil-nadu /

Headlines Today | சிலிண்டர் விலை குறைப்பு முதல் ஆசிரியர்களின் வருகை பதிவு செயலி முதல்... இன்றைய முக்கிய செய்திகள்

Headlines Today | சிலிண்டர் விலை குறைப்பு முதல் ஆசிரியர்களின் வருகை பதிவு செயலி முதல்... இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்

நாளை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் profile picture ஆக மூவர்ண கொடியை வைக்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

  சென்னையில் வர்த்தக எரிவாயு சிலிண்டருக்கான விலை 36 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இரண்டாயிரத்து 177 ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து 141 ஆக விலை குறைந்துள்ளது..மேலும் படிக்க

  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறுகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பங்கேற்க திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இன்று முதல் TNSED செயலியில் மட்டுமே ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது. காலை பத்து மணிக்குள் ஆசிரியர்கள் தங்களது வருகையை பதிவு செய்ய தவறினால் அன்றைய தினம் பணிக்கு வரவில்லை என எடுத்துக் கொள்ளப்படும். இதேபோல விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காமன்வெல்த் தொடரின் மூன்றாவது நாளில், பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீரர்கள் அச்சிந்தா ஷூலி மற்றும் ஜெரிமி லால் ரிங் குங்கா ஆகியோர் தங்கம் வென்றனர்.இதன் மூலம் நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி 3 தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

  குரங்கு அம்மை தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு தனிக்குழுவை நியமித்துள்ளது. கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறிக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் சுகாதாரப்பிரிவின் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான இக்குழுவில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

  நாளை முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் profile picture ஆக மூவர்ண கொடியை வைக்க வேண்டும் என்று நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தேசத்தின் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையிலும் தேசிய கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கய்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இந்த செயல்பாடு அமையும் என தெரிவித்தார்.

  செஸ் ஒலிம்பியாட் தொடரின் 3-வது சுற்றில் இந்திய ஆடவர் 'பி' அணி வெற்றிபெற்று அசத்தியுள்ளது. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆடவர் 'பி' அணியில் குகேஷ், சரின் நிஹில், சத்வானி ஆகியோர் வெற்றியை தேடித் தந்தனர். அத்துடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரக்ஞானந்தா போராடி வெற்றிபெற்றார்... மேலும் படிக்க

  சென்னை ஐ.ஐ.டி., மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் 300 சிசிடிவி புகைப்படங்களை கொண்டு சென்னை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

  2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக ஒன்றிணையும் என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனின் இல்லத்திற்கு சென்ற சசிகலா, உடல்நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் அனைவரும் தனக்கு வேண்டியவர்கள் என்றும், அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
  Published by:Murugesh M
  First published:

  Tags: Headlines, News

  அடுத்த செய்தி