Home /News /tamil-nadu /

Tamil News Today: இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 6, 2022)

Tamil News Today: இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 6, 2022)

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Today Headlines : தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமலாகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  1. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

  3. அரசின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், விரைவில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  4. தமிழகத்தில் கொரோனா தொற்று புதன்கிழமையன்று சுமார் இரண்டு மடங்கு உயர்ந்து, 4 ஆயிரத்து 862 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449-ஆக அதிகரித்துள்ளது.

  5. அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 481 பேருக்கு நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது.

  6. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் படுக்கைகளும், 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகளும் தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  7. இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் தமிழகத்தை, தெற்காசியாவிற்கே முன்னுதாரணமாக உருவாக்குவோம் என தனது உரையில் குறிப்பிட்ட தமிழக ஆளுநர், கொரோனா 2ம் அலையை சிறப்பாக கையாண்டதாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார்.

  8. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 நாட்கள் மட்டுமே சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

  9. அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநரை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெளிநடப்பு செய்தது.

  10. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், வரும் 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  11. நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்துள்ள சூழலில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  12. நாடு முழுவதும் தொற்று பரவல் அதிகரித்துள்ள சூழலில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  13. முதல் இரண்டு தவணையில் எந்த நிறுவனத்தின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதோ, அதே நிறுவனத்தின் தடுப்பு மருந்து தான் பூஸ்டர் டோஸ் ஆகவும் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  14. சென்னை மாநகராட்சியில் திருமணங்கள் நடைபெறும் ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  15. ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில், அதன் பாதிப்பால் நாட்டில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

  16. சேலத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 18 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  17. ஆசிரமம் நடத்த நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் பவித்ராவை போலீசார் கைது செய்தனர்.

  18. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தில் இந்த மாதத்தில் நடைபெறவிருந்த அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், தள்ளிவைக்கப்படுகின்றன.

  19. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆரம்ப சுகாதார நிலையங்களை, தொற்றாளர்களுக்கான தற்காலிக கொரோனா பராமரிப்பு மையங்களாக மாற்ற. பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

  20. வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நடப்பாண்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  21. சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கடந்தப்பட இருந்த 7 லட்ச ரூபாய் மதிப்பிலான. நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

  22. வாகனங்களில் தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  23. கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திய சிறாருக்கு பாராசிட்டமால் அல்லது வலி நிவாரணிகளை கொடுக்கக் கூடாது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. Read More : தமிழகத்தில் ஊரடங்கு அறிவிப்பு... எவற்றுக்கு அனுமதி? எவற்றுக்கு தடை?

  24. அமெரிக்காவில் வீசிய பனிப்புயலால் வாகன ஓட்டிகள் 24 மணி நேரம் வரை சாலையிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

  25. ஈரானியத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கப்போவதாக ஈரான் சூளுரைத்துள்ளது.

  26. குவைத்தில் வீதியில் சுற்றித் திரிந்த வளர்ப்பு சிங்கக்குட்டியை பெண் ஒருவர் நாய்க்குட்டியை தூக்கிச் செல்வது போல கையில் தூக்கிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. Read More : ஆபாசப்பேச்சு.. வீடியோ.. சிறைப்பறவைகளாக ரவுடி பேபி சூர்யா - சிக்கா

  27. நீட் தேர்வு ரத்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத விவகாரத்தில் ஆளுநர் பதவி விலக வேண்டும் என திமுக எம்பி டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

  28. அரசு வேலை வாங்கி வேலை தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். Must Read : Chennai Power Cut |  சென்னையில் இன்று (06-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

  29. பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

  30. இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற , தென் ஆப்ரிக்கா அணிக்கு இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி