நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், இன்றும், நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது. நேரடியாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 534 இடங்களுக்கு, 719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
15 முதல் 18 வயது வரையிலான சிறாருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று முதல் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் ஒன்றாம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு பொருட்கள் சில இடங்களில் தரமற்று வழங்கியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, குடிமைப் பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்களுடன், அக்கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளது.
திருப்பூரில் கடந்த 4 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில், அந்த சிறுத்தை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது.
சிதம்பரம் அருகே, வீட்டை விட்டு காதலனுடன் பெண் சென்றதால், இரண்டு உயிர்கள் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே யூடியூப் பார்த்து நாட்டு வெடிமருந்து தயாரித்து, காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
குடியரசு தின அனிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி, பொதுமக்களின் பார்வைக்காக விழுப்புரத்திற்கு கொண்டுவரப்பட்டது.
காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் எக்ஸ்ரே அறையில், சாரைப்பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, காவல் ஆய்வாளர் உட்பட 9 பேரிடம் கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டார்.
Must Read : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு... தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என இந்தியா- மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
கட்சித் தொண்டர்கள் விரும்பினால் பஞ்சாப் தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தயார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இந்தியாவின் தலைவிதியை உத்தர பிரதேச தேர்தல் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஃபாரா நயீம், தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் கட்சிகள் சூறையாடி இருப்பதாக ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரீபெய்டு திட்டங்களின் செல்லுபடி காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக புதிதாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம், கேரளா உள்ளிட்ட 8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சூரரைப் போற்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.
திருப்பூரில், மலையாள நகைச்சுவை நடிகரின் மீன் அங்காடியை நடிகை பூர்ணா திறந்தவைத்த போது, அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது.
Read More : கனிமொழியை பாராட்டிப் பேசிய அதிமுக எம்.பி.
ஆப்கானிஸ்தான் நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதால், வாழ்வாதாரத்திற்காக உடல் உறுப்புகளை விற்பனை செய்யும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 38 பேர் நடுக்கடலில் மாயமாகியுள்ளனர்.
2022ம் ஆண்டின் வசந்தகால திருவிழா கலை நிகழ்ச்சிகள், சீனாவின் பெய்ஜிங் நகரில் களைகட்டியுள்ளது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று ரஷ்யா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்துக்கு முதல்முறையாக கருப்பின பெண் நீதிபதி நியமனம் செய்யப்படுவார் என்று அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பேர்டி, முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.