Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 27, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 27, 2022)

 மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Tamil News Today : தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  தமிழ்நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பரவல் குறைந்து, தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது.

  தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டுள்ளது.

  தேசிய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பை தொடங்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் மற்றும் பொது நூலக விதிகளில் நவீன காலத்திற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

  424 கோடி ரூபாய் செலவில் ஈரோடு, மன்னார்குடி, திருத்தணி உட்பட 13 நகரங்களில் புதிதாக பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

  2021ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதாளர்கள் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

  கொரோனா குறைந்தால் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், பள்ளிகளை திறக்க அனுமதிக்குமாறு முதலமைச்சருக்கு பரிந்துரைப்போம் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

  திருப்பதியில் பிப்ரவரி மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் நாளை 28ஆம் தேதி காலை ஒன்பது மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படவுள்ளது.

  அவிநாசி அருகே ஒரு நாயை சிறுத்தை அடித்து தின்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

  தப்பியோடிய சிறுத்தை அவினாசி அருகே பொங்குபாளையம் பகுதியில் இருப்பதை உறுதி செய்துள்ள வனத்துறையினர்.

  35 ஆண்டு கால சமூக சேவைக்கான அங்கீகாரமாக பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கிராமாலயா தொண்டு நிறுவனர் தாமோதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

  நாட்டின் 73வது குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். டெல்லி விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள், கம்பீரமாக அணிவகுத்தன.

  சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது, அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபருக்கு 2வது முறையாக தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் இதனால் மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

  பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் வருத்தம் தெரிவித்ததாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

  நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டியில் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்னேற்பாடுகளை மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார் பார்வையிட்டார்.

  சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இரவிலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அலங்கார செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

  Also Read : நாஞ்சில் சம்பத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது.. தமிழக அரசு அறிவிப்பு

  திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.

  கடலூர் அருகே வீட்டு சமையல் அறையில் இருந்த குக்கருக்குள் 4 அடி நீளமுள்ள நல்லபாம்பு கிடந்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  விக்கிரவாண்டி அருகே தரமில்லாத உணவை கூடுதல் விலைக்கு விற்ற ஐந்து தனியார் உணவகங்களில் அரசுப்பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஓதவந்தான்குடி நியாயவிலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியில், வண்டுகளும், புழுக்களும் இருப்பதாகக் கூறி, அதனை கிராம மக்கள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

  தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற நடவடிக்கை எனும் குற்றச்சாட்டிற்கு எந்த அடிப்படையும் இல்லை என பள்ளியை நடத்தும் தூய இதய மரியன்னை சபை விளக்கம் அளித்துள்ளது.

  பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வனத்துறையினர் விரட்டியும் வனப்பகுதிக்குள் செல்ல மருத்து வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது.

  அனைத்துப் பள்ளிகளையும் உடனடியாக திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.

  கோவை ராமநாதபுரம் டிரினிட்டி தேவாலயத்தில் கடந்த 23 ஆம் தேதி செபஸ்தியர் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

  Must Read : பொங்குபாளையம் பகுதியில் ஒரு நாயை சிறுத்தை அடித்து தின்றது.... 

  புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் காய்கனி அங்காடியில் பணம் மற்றும் செல்போன்களை திருடிய இரு இளைஞர்களை சிசிடிவி கேமிரா உதவியுடன் போலீசார் கைதுசெய்தனர்.

  நாட்டின் 73-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.

  தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சௌக் பகுதியில் ட்ரோன் மூலம் வானில் வர்ணஜாலம் நிகழ்த்தப்பட்டது.

  உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ஜாட் சமூக தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

  மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை நிராகரித்துள்ளார்.

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில், 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

  மகாராஷ்டிராவில் நிர்பயா குழு ரோந்து வாகனங்களை முதலமைச்சர் உத்தவ் தாக்ரே காணொலி முலம் துவங்கிவைத்தார்.

  ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடுமையான பணி பொழிவு ஏற்பட்டுள்ள இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

  பீகாரில் ரயில்வே துறை பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் ஒரு ரயிலுக்கு தீ வைத்தனர்.

  Read More : இந்தியாவில் 2021-ல் மட்டும் 49 யானைகளின் உயிரை சூறையாடிய வேட்டைக்காரர்கள்.. 77 பேர் கைது: ஆர்டிஐ விளக்கம்!

  பிரான்ஸில் கடல் ஆமைகளின் மூலம் புயல்கள் மற்றும் கடலின் தட்ப வெப்பநிலையை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் புதிய முறையை கையாண்டு வருகின்றனர்.

  விளையாட்டுத்துறையில் அரசியலும், முதலாளித்துவமும் ஆக்கிரமித்துள்ளது என முன்னாள் ஒலிம்பியன்கள், சர்வதேச வீரர்கள், சாதனையாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

  மேற்கிந்திய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Lockdown, Today news, Top News

  அடுத்த செய்தி