Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 26, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 26, 2022)

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

Republic Day : குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

  நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, நாட்டு மக்களிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

  கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வலிமையாக போராடுவதாகவும், எதிர்கால சவால்களை சமாளிக்க இந்தியா சிறந்த இடத்தில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம் தெரிவித்தார்.

  குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

  தலைநகர் டெல்லியில் உள்ள முக்கிய கட்டடங்கள் அலங்கார தோரணையில், பொலிவுடன் காணப்பட்டன. குறிப்பாக, ராஷ்டிரபதி பவன் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.

  சென்னையில் குடியரசு தின விழாவை நேரில் பார்வையிட வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

  நாட்டின் 73வது குடியரசு தின விழாவையொட்டி தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே தற்போதைய அவசரத் தேவை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

  குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில், சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் மிதந்தது.

  சென்னை மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், நேப்பியார் பாலம் உட்பட, சென்னையின் பெருமையை பறைசாற்றும் கட்டடங்களும் ஒளி வெள்ளத்தில் மிதந்தன

  அசம்பாவிதமும் ஏதும் ஏற்படாத வகையில் சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  குடியரசு தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழக ஊர்தி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

  ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

  அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளில்லா வான்வழி வாகன கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தவறி பொதுப்பிரிவில் விண்ணப்பித்த அரசுப் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, ஆவணங்கள் சரியாக இருந்தால் 7.5% இட ஒதுக்கீட்டில் இணைத்துக்கொள்ளப்படும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் புதிதாக 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

  மேகதாது அணை விவகாரத்தில் மௌனம் காக்கும் தமிழக பாஜக, காங்கிரஸ் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

  கொடைக்கானலில் பகல் நேரத்திலும் கடுங்குளிர் வாட்டி எடுப்பதால் சுற்றுலா பயணிகளில் பலர் விடுதிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மதமாற்றம் தொடர்பாக அந்த மாணவி பேசியதாக வெளியான வீடியோவை பதிவு செய்தவர், வல்லம் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி செல்போனை ஒப்படைத்தார்.

  அரியலூர் மாணவி விவகாரத்தை மறக்கமாட்டேன் என்றும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தஞ்சை எஸ்.பி.,க்கு உரிய மருந்து தரப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

  நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

  தமிழகத்தில் மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  புதுக்கோட்டை நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சிதளம் மூடப்பட்டுவிட்டதாகவும், இனி அந்த தளம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பதிலளித்துள்ளது.

  சென்னை புறநகர் பகுதிகளில் 48 வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி படப்பை குணா திடீரென சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவிடம் நிறைய இடங்களை கேட்க இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக நடத்தியதற்காக சிறந்த நிர்வாகத்திற்கான விருது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு வழங்கப்பட்டது.

  தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்து 453 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடிக்க, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

  திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பாப்பாங்குளத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை தற்போது பக்கத்து ஊருக்கு இடம்பெயர்ந்துள்ளதால், தேடுல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

  நாகையைச் சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளை கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் இருந்து குறி தவறிய குண்டு, ஒரு வீட்டினுள் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற புஷ்பாஞ்சலியில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தில் கன்னித் திருவிழா கொண்டாடப்பட்டது.

  தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி கால பைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

  திருச்சி மாவட்டம், மணப்பறை அருகே கோட்டை மாரியம்மன் கோயிலில், 48-ம் நாள் மண்டல பூஜையை ஒட்டி, மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

  தஞ்சையில் எம்.ஜி.ஆர் சிலையை பெயர்த்து பெட்டிக்கடைக்கு பின்புறம் வீசிச் சென்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செவ்வாய் பொங்கல் மஞ்சுவிரட்டு கோலாகலமாக நடைபெற்றது.

  தமிழகத்தில் மதமாற்றத்தால் எந்த தற்கொலையும் நடைபெறவில்லை என்றும் பா.ஜ.க. இதனை அரசியலாக்குவதாகவும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, பொதுமக்கள் நடமாடும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  நாகை மாவட்டம் சிகார் கிராமத்தில் அரசு நிலத்தில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

  Must Read : 2021 உலகளாவிய ஊழல் குறியீடு: இந்தியா முன்னேற்றம்

  குடியரசு தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில், பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

  குடியரசு தின விழாவை ஒட்டி, ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தலைமைச் செயலகம், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

  குடியரசு தின விழாவை கொண்டாடும் வகையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலகங்கள் மற்றும் புராதன கட்டடங்கள் அலங்கரிக்கப்பட்டு, விளக்கொளியில் ஜொலித்தன.

  நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

  மத்திய அரசின் பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாக மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ளார்.

  உத்தரப் பிரதேச காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான RPN சிங், பா.ஜ.கவில் இணைந்துள்ளார். வியாழக்கிழமை முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையை தொடங்குகிறார்.

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்யை தாக்கல் செய்ய உள்ளார்.

  Read More : ரேஷன் கடையில் கைரேகை பதிவதில் சிக்கல்.. தமிழக அரசு சூப்பர் உத்தரவு

  ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ள சூழலில், உக்ரைன் நாட்டுக்குள் படைகளை அனுப்ப திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  துருக்கியில் வீசிய பனிப்புயலால் நெடுஞ்சாலை ஒன்றில் 200க்கும் மேற்பட்டோர் வாகனங்களிலேயே சிக்கிக் கொண்டனர்.

  நாசாவின் ஜேம்ஸ் வெப்' விண்வெளி தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கண்காணிக்கும் நிலைக்கு சென்றது

  அமெரிக்காவில் காரின் சக்கரத்துக்கு இடையில் சிக்கிக் கொண்ட மூதாட்டியை, காரை வெறும் கையால் தூக்கி போலீசார் மீட்டுள்ளனர்.

  சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக வசந்தகால திருவிழா கலை நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றன.

  டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தன்று Param Vishisht Seva என்ற பதக்கம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான ரஃபேல் நடால், அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Republic day, Today news, Top News

  அடுத்த செய்தி