Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 25, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 25, 2022)

மாதிரி படம்

மாதிரி படம்

Tamil News Today : தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் புதிதாக 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

  தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கோரி வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.

  கொரோனா அச்சம் காரணமாக குடியரசுத் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் இந்தாண்டும் ரத்து செய்யப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

  நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் மருத்தவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இதில், அரசு இடஒதுக்கீட்டு பிரிவுக்கான தரவரிசைப் பட்டியலில் நாமக்கலை சேர்ந்த மாணவ, மாணவியர் முதல் இரு இடங்களை பிடித்தனர்.

  தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டப்பணிகளை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  குடியரசுத் தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு காவல் ஆணையம் அமைக்க விதிகள் திருத்தப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

  தஞ்சாவூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது பேச்சை செல்போனில் பதிவு செய்த முத்துவேல், இன்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  மானாமதுரை நகராட்சி தலைவர் பதவியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை, தமிழ்நாடு அரசு மேலும் 5 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

  பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள், வரும் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

  தஞ்சையில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

  கோவை அருகே பேரூராட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்தது தொடர்பாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

  கூலி உயர்வு கோரி கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஆராய்ச்சி மையத்துடன் கூடிய ஜவுளி ஆணையத்தை அமைக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஏழை. எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும் என வங்கி நிர்வாகிகளிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூர் அடுத்த ஒரக்கடம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில், உயர் கோபுர மின் விளக்குகளை திமுக எம்பி டி.ஆர்.பாலு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தார்.

  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு, மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் வழங்கியுள்ள BHOG தரச்சான்றிதழ்களை, முதலமைச்சரிடம் காண்பித்து, அத்துறைக்கான அமைச்சர் சேகர்பாபு வாழ்த்துபெற்றார்.

  அரக்கோணம் அருகே அரிகிலாபாடியில், பஞ்சாயத்துத் தலைவர் வள்ளியை பணிசெய்ய விடாமல் வார்டு உறுப்பினர் வஜயலட்சுமி மற்றும் அவரின் கணவர் செயல்படுவதாக இருளர் இன மக்கள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில், வீரர்கள் குழுவாக காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கிராமத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்வதை கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.

  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

  திருச்சியில் சூதாடியதால் ஏற்பட்ட கடனை அடைக்க, 2 மாத குழந்தையை விற்ற தந்தை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  திருவள்ளூர் மாவட்டம் பாலவேடு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மழை நீர் தேங்கி இருப்பதால், சாலையில் வைத்து சடலத்தை எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சோள காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒருவரை தாக்கியது.

  நடுக்கடலில் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது ஒரே நாளில் இரண்டு முறை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருவாரூரில் வீட்டு வாசலில் நின்றிருந்த 10 வயது சிறுமியை மதுபோதையில் இருந்த நபர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சாலையோரமாக ஒரே இடத்தில் 24 குரங்குகள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Read More : தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்

  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  உத்ராகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது.

  ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து ஊடகங்கள் நடத்தியது கருத்துக்கணிப்புகள் அல்ல ஓபியம் கணிப்புகள் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

  குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக டெல்லியில் ட்ரோன் கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.

  மும்பை வசாய் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த பயணியை, ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பத்திரமாக மீட்டார்.

  இசையமைப்பாளர் இளையராஜாவின் முதல் மற்றும் ஒரே மாணவர் என்று கூறியுள்ள நாதஸ்வர கலைஞர் லிடியன், இதுதொடர்பான படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

  வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த 20வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது, கூழாங்கல் படத்துக்கு அளிக்கப்பட்டது.

  அடுத்த மாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மாறன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

  விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படம், பிப்ரவரி 10ம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  Aldo Read : கோவையில் அதிமுக பிரமுகர் ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு

  இந்திய பங்கு சந்தைகள் திங்கட்கிழமை கடும் சரிவை சந்தித்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

  தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றரை சதவீமாகவும், இறக்குமதி வரியை 4 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என்று, தங்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஒமைக்ரான் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்திய திரைத்துறைக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வர்த்தக இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  ஒமைக்ரான் தான் கொரோனா வைரசின் கடைசி திரிபு என்றும், கொரோனாவின் முடிவு என்றும் கருதுவது அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  சீன நாட்டின் பாரம்பரிய வசந்தகால புத்தாண்டை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  பெல்ஜியம் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் பிரசல்ஸ் நகரமே போர்க்களமானது.

  பன்னாட்டு குற்றங்களின் அடையாள சின்னமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இருக்கிறார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சாடியுள்ளது.

  கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரத்தில் வீசிய எல்பிடா பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

  உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

  அமெரிக்காவில் தாயின் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் இந்திய மதிப்பில் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

  Must Read : சொத்துக்காக அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி.. குமரியில் நடந்த பயங்கரம்

  2021ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

  ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.

  தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் மற்றுமொரு சங்கடத்தை சந்தித்துள்ளது இந்தியா. ஒரு நாள் தொடரிலும் 3 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.

  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரின் மகள்கள், தெலுங்கு படமான புஷ்பா திரைப்படத்தில் இடம்பிடித்த சாமி சாமி பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி