Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 24, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 24, 2022)

கோப்புப் படம்

கோப்புப் படம்

Tamil News Today : முதுபெரும் தொல்லியல் அறிஞரும், தமிழ்நாடு தொல்லியல்துறையின் முதல் இயக்குநருமான நாகசாமி சென்னையில் காலமானார்.

  தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்களில் 3 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் அனுமதி.

  சென்னை வடபழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

  தமிழகத்தில் ஒரேநாளில் 30,580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

  2022ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளின் உத்தேச வருடாந்திர கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

  முதுபெரும் தொல்லியல் அறிஞரும், தமிழ்நாடு தொல்லியல்துறையின் முதல் இயக்குநருமான நாகசாமி சென்னையில் காலமானார்.

  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதல் இயக்குனரான பத்ம பூஷன் நாகசாமி அவர்களின் மரணம் நமது தேசத்தின் தொல்லியல் துறைக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் இழப்பு என கனிமொழி தெரிவித்துள்ளார்.

  குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

  முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சாலைகள் ஆளரவமற்று காட்சியளித்தன. தடை உத்தரவை மீறி அவசியமின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.

  சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பங்கேற்கவுள்ள அலங்கார ஊர்தி, திருவல்லிக்கேணியில் வேகமாக தயாராகி வருகிறது.

  காவிரி - ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாவது திட்டம் தொடர்பான, தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மூன்றாம் சுரங்கம் அமைப்பதற்காக பொதுமக்களிடம் கையகப்படுத்தும் நிலத்திற்கு நியாயமான இழப்பீட்டை வழங்க வேண்டுமென அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  திருவள்ளுர் அருகே இரு சக்கர வாகனம் மீது மோதிய விரைவு ரயில் அதனை மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஓசூர் அருகே வனப்பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  பொள்ளாச்சியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

  புதுக்கோட்டை மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையொட்டி, மாநில எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  பரமக்குடி அருகே பெண்களின் ஆடைகளை திருடும் நபரை போலீசார் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சேலத்தில் புல்லட்டை ஓட்டிப் பார்ப்பதாகக் கூறி சினிமா பாணியில் திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

  இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக INSACOG அமைப்பு தெரிவித்துள்ளது.

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் முழு உருவ முப்பரிமாண ஒளிப்படத்தை இந்தியா கேட் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.

  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கை நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  விரல்களால் தண்டால் எடுக்கும் போட்டியில் முந்தைய கின்னஸ் சாதனையை மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார்.

  Also Read : உன் ஏரியாவுல தான் இருக்கேன்.. காதல் விவகாரத்தில் சவால் விடுத்த இளைஞர் குத்திக்கொலை

  ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் கைது.

  குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகை நிகழ்ச்சி, டெல்லி ராஜபாதையில் கோலாகலமாக நடைபெற்றது.

  ஒமைக்ரான் தொற்று பரவலைத் தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது திருமண நிகழ்ச்சியை ரத்துசெய்துள்ளார்.

  Read More : திருடனாக மாறிய முன்னாள் போலீஸ்.. ஓடும் ரயிலில் தொடர் திருட்டு

  ஜெர்மனியில் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பெருவில் கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த உதவும் வகையில் மக்கள் தங்கள் தலைமுடியை தானமாக வழங்கி வருகின்றனர்.

  இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றிபெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது.

  Must Read : தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசு: மீனவர் சங்கத்தினர் கண்டனம்

  சையது மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியில், நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறினார்.

  இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, வற்புறுத்தலால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி