Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 21, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 21, 2022)

கொரோனா

கொரோனா

Tamil News Today : திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வலையில் சிக்கியுள்ளனர்.

  தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது.

  இம்மாத இறுதிக்குள் 10 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு, 29 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 28 ஆயிரத்து 561 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழகத்தில் முக்கிய கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

  அதிமுக முன்னாள் அமைச்சர்களில் 6வது நபராக கே.பி. அன்பழகன் வீடு உள்ளிட்ட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

  பொங்கல் பரிசுத்தொகுப்பு முறைகேட்டை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என கே.பி.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

  திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை வலையில் சிக்கியுள்ளனர்.

  முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

  விழுப்புரம் அருகே ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் 15 போலீசாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது

  செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதா, இல்லையா என்பது குறித்து வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கோவை, திருவாரூர் மாவட்டங்களில் திமுக சார்பில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பு மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

  தவறான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் யூடியூப் தளத்தை ஏன் தடை செய்யக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

  நீலகிரியில் மின்சாரம் தாக்கி யானை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உயிரிழந்த விவகாரத்தில், மின்சார வாரியத்திற்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

  குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில், முப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

  ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் தமிழக மீனவரின் விசைப்படகு மூழ்கியது. கடலில் தத்தளித்த 7 பேரை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

  கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கியதற்கான நிலுவைத் தொகை 28 லட்ச ரூபாயை வழங்காததால், சோளிங்கர் அரசு மருத்துவமனை முன் உணவக உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் பா. முருகேசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் விவாதிக்க தயாரா என உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.

  நடிகை விஜயலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இழிவாக விமர்சித்த விவகாரத்தில், நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

  உத்தரபிரதேச மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் மற்றும் கோவா, உத்தராகண்ட் மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

  ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.

  உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணாவை தொடர்ந்து, அவரது மருமகன் பிரமோத் குப்தாவும் பாஜகவில் இணைந்துள்ளார்

  வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற மனைவியால் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்திய சந்தையில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட டொயோடா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் மாடல் டிரக் வரும் மார்ச் மாதம் அறிமுகமாகிறது.

  தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் கவலை அளிக்கும் வகையில் கொரோனா அதிகரித்துள்ளதால், அங்கு மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

  இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் இரண்டாம் அலையை காட்டிலும் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

  Also Read : மதம் மாற வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை... சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர் உட்பட பலர் கைது

  ஜம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படையில் புதிதாக 100 மோப்பநாய்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகர்த்தாவிலிருந்து போர்னியோ (Borneo) தீவுக்கு மாற்றப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.

  அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், அவரின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளதாக வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

  மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபேரியாவில் மத வழிபாடு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

  கொரோனா பரிசோதனை காரணமாக கென்யா - உகாண்டா எல்லையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

  Read More : கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு - சீமான்

  பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

  சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பரத் சுப்ரமணியத்திற்கு 8 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதலமைச்சர் கவுரவித்தார்.

  சையது மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியில் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் எச்.எஸ்.பிரணாய் முன்னேறியுள்ளனர்.

  Read More : பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கோரும் அண்ணாமலை

  மகளிருக்கான தேசிய அளவிலான கால்பந்து லீக் தொடரை சவுதி அரேபியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

  தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி