Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 19, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 19, 2022)

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Tamil News Today : மத்திய அரசு நிராகரித்த தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம், பிப்ரவரி 27ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

  தமிழ்நாட்டில் 1,36,550 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 23,888 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து 8 ஆயிரத்து 305-ஆக பதிவாகியுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

  தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தோறும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசு நிராகரித்த தமிழ் நாட்டின் அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கல்வி, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து தரப்புகளிலும் மேம்பட்ட மாநிலமாக உருவாக்க ஆலோசனைகளை வழங்கும்படி மாநில திட்டக்குழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் 18 வயது சிறுத்தை உயிரிழந்துள்ளது.

  தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  கோவையில் பெரியார் சிலையை அவமதிப்பு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த இருவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

  நாகை அருகே நேரடி கொள்முதல் நிலையத்தின் முன் விவசாயிகள் அடுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்தன.

  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே வீரளூரில், பொதுப்பாதை வழியாக அருந்ததியினரின் இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச்சென்றது தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், 15 நாட்களில் அருந்ததியின மக்களுக்கு சொந்தமான மயான பாதையை சரிசெய்து ஒப்படைக்க நடவடிக்கை.

  முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை திரிக்காமல் தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

  கோயம்புத்தூர் அருகே குடோனில் பதுங்கி இருக்கும் சிறுத்தை, கூண்டில் சிக்காமல் திரும்பிச் செல்லும் காட்சிகளை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

  மதுரையில் மூளைச்சாவு அடைந்தவர்களின் இரண்டு இதயம் மற்றும் சிறுநீரகங்கள் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.

  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கிராமத்தில் சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 6 வயது சிறுமி உயிரிழந்தார்.

  முருகனின் அறுபடை வீடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா, கொரோனா கட்டுப்பாடுகளால் களையிழந்தது.

  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகள், ஆஸ்கர் விருதுக்கான அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அங்கீகரிகப்பட்டுள்ளது.

  தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து, அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

  காலிங்கராயன் வாய்க்கால் மாசுபட்டுள்ளதால், அந்த நீரை அருந்தும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

  கொரோனா நோயாளிகளுக்கு 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அவர்களை காசநோய் பரிசோதனைக்கு அறிவுறுத்த வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

  மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 7 சதவிகிதம் குறைவாகும்.

  காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட Antrix-devas ஒப்பந்தத்தில் 488 கோடி ரூபாய் முறைகேடாக பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

  ஆம் ஆத்மியின் பஞ்சாப் மாநில முதலமைச்சர் வேட்பாளராக நகைச்சுவை நடிகர் பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  ஜம்மு- காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 30 பேரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

  Also Read : குழந்தை எனக்கு பிறக்கவில்லை.. கைவிரித்த காதலனால் பெண் தற்கொலை - செல்போனில் சிக்கிய ஆதாரங்கள்

  பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மணல் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் சரண்ஜித் சிங்கின் மருமகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

  அசாமில் வன சுற்றுலா சென்ற பயணிகளின் வாகனங்களை யானைகள் கூட்டம் திடீரென வழிமறித்ததால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர்.

  மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் திரையரங்க வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் கடும் புகைமண்டலம் ஏற்பட்டது.

  அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுதால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  Read More : மாடுபிடி வீரருக்கு கார் பரிசா? தங்கர்பச்சான்சொல்லும் மாற்று யோசனை

  இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு இயக்கத்தை முன்னிறுத்தி, ஆல்பா மென் என்ற வன்முறை குழு உருவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  அந்நிய செலாவணிச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்துள்ளது.

  இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படும், பிளாஸ்டிக்கை உண்டு மேலும் இரண்டு யானைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Must Read : குழந்தைகள் விளையாடும் பொம்மைகளிலும் போலி.. சென்னையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொம்மைகள் பறிமுதல்

  இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான, முதல் ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

  டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக தாம் நியமிக்கப்பட்டால் அது மிகப்பெரும் கவுரவமாக இருக்கும் என்றும், பெரிய பொறுப்பு உருவாகும் எனவும் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலிய பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை உன்முக்த் சந்த் பெற்றுள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி