Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 18, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 18, 2022)

கோப்புப் படம்

கோப்புப் படம்

Tamil News Today : ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இந்த நாட்களில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

  7 வண்ண திரைகளை நீக்கி வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் இன்றி இந்த ஜோதி தரிசனம் நடைபெற்றது.

  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயில் உட்பட, முருகனின் அறுபடை வீடுகளில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

  வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையத்தில் பணியாற்றும் 25 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்றை விட 500 குறைந்து 23,443-ஆக பதிவாகியுள்ளது.

  சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 8,591-ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 2,236 பேரும், கோவையில் 2,042 பேரும், திருவள்ளூரில் 1,018 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை, வீரர்கள் தீரத்துடன் அடக்கி, தங்க காசு, மோதிரம் உட்பட பரிசு மழையில் நனைந்தனர். 21 காளைகளை அடக்கிய முதலிடம் பிடித்த கார்த்திக், காரை பரிசாகப் பெற்றார்.

  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக, செந்தாமரைக்கண்ணனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்பதவியை வகித்து வந்த புவியரசன், செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்றம் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

  சென்னை பெரும்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்ட செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

  மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கு இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே மயானத்திற்கு செல்லும் பாதை தொடர்பான விவகாரத்தில், ஒரு தரப்பினரை, மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கினர்.

  பழனி உழவர் சந்தையை அதிகாரிகள் தாமதமாக திறப்பதாக குற்றம்சாட்டி, காய்கறிகளை இறக்காமல் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், தை தேர் திருவிழாவையொட்டி நம்பெருமாள் நிலத்தேரில் எழுந்தருளினார்.

  தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரத்தில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

  சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட காளை, கிணற்றில் தவறிவிழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பூரில் 20 ஆயிரம் நிறுவனங்கள், இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

  நாகர்கோவிலில் பிரேக் இல்லாத அரசு பேருந்தை ஓட்டிச் செல்லுமாறு நிர்வாகம் கூறியதால், ஓட்டுனருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

  கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தெப்ப உற்சவத்தையொட்டி ராமேஸ்வரம் கோவிலுக்குள் சுவாமி அம்பாளுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

  பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே, கல்லாற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள தடுப்பணை தண்ணீரில் மூழ்கி மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் குளித்த 5 மாணவர்கள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

  ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்கள் இந்த நாட்களில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

  அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், அந்நிய மொழிகளை பயிற்றுவித்து வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசித்து உடனடியாக பதில் அளிக்கப்படும் என்று தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சிவராஜா ராமநாதன் சந்தித்தார்.

  கோவையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாத கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

  புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ரங்கசாமி அரசு உத்தரவிட்டுள்ளது.

  குடியரசு தின அணிவகுப்பில் தமிழ் நாடு அரசின் சார்பில் பங்கேற்கவிருந்த அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  குடியரசு தின அலங்கார ஊர்திகள் விவகாரத்தில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  உலகத்தின் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியா மாறி வருவதாக உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

  விருப்பத்துக்கு மாறாக யாரையும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி போட முடியாது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான, ஐஎன்எஸ் குக்ரியை காட்சிக்கு வைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

  வீடு மற்றும் அலுவலகங்களில் தற்போது உள்ள மின் இணைப்புகளை கொண்டே, மின்சார வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  Also Read : கடைசி நேரத்தில் வாங்கிய லாட்டரி மூலம் கோடீஸ்வரர் ஆன பெயிண்டர்

  நடப்பு நிதியாண்டில் நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் தற்போது வரை 350 கோடிக்கும் மேற்பட்ட டோலோ-650 மாத்திரைகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

  பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

  பஞ்சாபில் பிப்ரவரி 14 ஆம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 20 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  Read More : பொங்கல் விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்கள்.. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

  12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள உத்தராகண்ட்டில் அமைச்சர் பதவியிலிருந்து, ஹரக்சிங் ராவத் நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் ஹரக்சிங்கை, 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக, பாஜக தலைமையும் அறிவித்துள்ளது.

  நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் தொடக்கமாக குடியரசு தினத்தன்று பிரமாண்டமான விமான அணிவகுப்பு நடைபெறவுள்ளது. இந்த அணிவகுப்பில் ஐந்து ரஃபேல் விமானங்கள் உட்பட 75 விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தவிருக்கின்றன.

  ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்ய உள்ள ஐந்து எஸ் - 400 ஏவுகணை தடுப்பு இயந்திரங்களில் ஒன்று, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

  Must Read : தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி பிரிவதாக அறிவிப்பு... 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்தது

  மகாராஷ்டிரா மாநிலம் பிவந்தி நகர் அருகே ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

  2020- ஆம் ஆண்டில் நான்கரை கோடி இந்தியர்கள் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக ஆக்ஸ்ஃபேம் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

  ஸ்பெயினில் குதிரைகள் தீ மிதிக்கும் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சான் பார்டோலோம் எடி எனும் கிராமத்தில் ஆண்டுதோறும் இந்த பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுகிறது.

  அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை தொடர்ந்து பிரெஞ்சு ஓபனில் இருந்தும் ஜோகோவிச் விலகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி