Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 13, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 13, 2022)

போகி

போகி

Tamil News Today : வைகுண்ட ஏகாதசி நாளான இன்று பெருமாள் கோயில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம்.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
  சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.26 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால் காலை 6.15 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பழனியிலுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

  போகிப் பண்டிகை நாளான இன்று சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை எரித்து மக்கள் போகிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கரும்பு, மஞ்சள் கொத்து மற்றும் காய்கறிகள் விற்பனை களைகட்ட தொடங்கியது.

  மதுரையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 4 ஆயிரத்து 534 மாடு உரிமையாளர்களும், ஆயிரத்து 999 மாடுபிடி வீரர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 533 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது.

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உதவி வேளாண்மை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

  நடப்பாண்டு முதல் பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இஸ்ரோ-வின் புதிய தலைவராக எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிக்க உள்ளார்.

  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரங்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளது.

  10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள தேநீர் கடையில் பொதுமக்களின் உதவியுடன் ஒருவர் பணத்தை திருடிச் சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தால் பார் கவுன்சிலில் வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

  போலீசாரின் குடும்பத்தை சேர்ந்த 115 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உறுதியான நிலையில், அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒற்றுமையோடு உழைக்க வேண்டும் என, திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளர்.

  தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  நிர்வாக காரணங்களுக்காக தொழில்துறை வசமிருந்த சர்க்கரை ஆலைகளின் நிர்வாக விவகாரம், உழவர்நலத்துறை அமைச்சர் வசம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

  பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு இயக்கம் மூலம், ஊரகப்பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

  நாமக்கல்லில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசாரே முகக்கவசம் அணிவித்தனர்.

  திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 155 பயணிகளுக்கு தலா 8 கிராம் தங்க காசு வழங்கப்பட்டது.

  பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் 17 நாட்களில் உண்டியல் நிரம்பியது. இதனையடுத்து உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடைபெற்றது.

  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காசாங் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் கோயிலுக்கு வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ தன்னைப் பற்றி அருவறுக்கத்தக்க வகையில் பேசியதாக பெண் நிர்வாகி கொடுத்த புகாரில் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நெசவு செய்த பட்டு புடவைகளை ஊரடங்கு அச்சத்தால் வியாபாரிகள் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.

  ஓசூர் அருகே காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட மின் கம்பியை மிதித்த பக்கத்து தோட்டக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இறந்தவர் பெயரில் விவசாய கடன் வழங்கிய விவகாரத்தில் கூட்டுறவு சங்க செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் .

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி நிலையத்திற்கு, சுற்றுச்சுவர் எழுப்பக் கோரிய வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா பரவல் காரணமாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி, தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு, இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் இன்று உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய ஊழியர்கள் இல்லாததால் உற்பத்தி துவங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்கி உள்ளது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் டிவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

  பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

  Also Read : நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்- மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கூட்டணியின் முதல் வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். எதிர்கால உலகை வடிவமைப்பதே இந்திய இளைஞர்களின் கனவு என்று பேசினார்

  காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

  சமந்தாவின் ஓ சொல்றியா பாடலை தொடர்ந்து சிரஞ்சீவி, ரெஜினாவின் குத்துப் பாடலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  Read More : உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் ₹1 லட்சம் பணம் திருட்டு.. திமுக நிர்வாகி பாக்கெட்டை பதம் பார்த்தவரை தேடும் போலீஸ்

  நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தேசிய பெண்கள் ஆணையம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழக காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.

  விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் செயற்பாட்டாளர் சபேசனுக்கும், இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுக்கும் இடையே தொடர்பு இருந்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.

  கலபகோஸ் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பால் அங்கு வசிக்கும் கடல் உடும்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

  Must Read : தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 17,934 பேர் பாதிப்பு

  கவிஞரும், போராளியுமான மாயா ஏஞ்சலோவின் உருவம் கொண்ட நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

  அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதித்துள்ளதாக வடகொரிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

  கம்போடியாவில் கண்ணி வெடிகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற மகாவா என்னும் எலி தனது 8 வயதில் உயிரிழந்தது.

  கேப்டவுன் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க 210 ரன்களுக்குள் சுருண்டது. இரண்டாவது இன்னிங்சில், இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 57 ரன்கள் சேர்த்துள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Tamil News, Top News

  அடுத்த செய்தி