ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 12, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 12, 2022)

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

Tamil News Today : பணியாளர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், வரும் 17ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :

மதுரை அலங்காநல்லூரில் வரும் 16ஆம் தேதிக்கு பதிலாக, 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

பணியாளர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், வரும் 17ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரிலிருந்து வரும் மக்களுக்காக 16-ம் தேதிக்குப் பதிலாக 17-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைக்கிறார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்க மற்றும் புதுப்பிக்க சென்னையில் புதன்கிழமை முதல் கூடுதலாக 2 மையங்கள் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூறிய குற்றச்சாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மறுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் 15 ஆயிரத்து 379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் 300ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மஞ்சுவிரட்டுப் போட்டி, வரும் 16ம் தேதி நடக்க இருந்தது, இதுவும் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக, வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பின்பற்றவேண்டிய கொரோனா தடுப்பு நெறிமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ளது.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் பல்வேறு ரேஷன் கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா பரிசோதனைக் கட்டணத்தை 500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவப்படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கீட்டு அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட்ட நிலையில், கோயம்பேடு சந்தையில் கரும்பு, மஞ்சள் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சிவகங்கை, தருமபுரி மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுற்றுவட்டாரத்தில் மழை காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, புகையில்லா போகியை கொண்டாட வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

அடிப்படை வசதிகளுடன் ஓசூரில் மூன்று இடங்களில் தற்காலிக உழவர் சந்தை திறக்கப்பட்டுள்ளது.

ஓசூர் அருகே வீட்டிற்குள் தங்கச் சிலை இருப்பதாகக் கூறி பூஜை செய்வது போல ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றிதிரிந்த கால்நடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்கக் கோரி புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில், பெருமாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மதுபோதையில் தள்ளி விட்டதில், அண்ணன் உயிரிழந்தது தொடர்பாக தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி, சிவகங்கை அருகே நடைபெற்ற சந்தையில் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே, 400 எக்கர் பரப்பளவிலான மானாவரி பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள்குலை அறுவடை முழுவீச்சல் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு உரிமை கோருவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கோயிலை கையகப்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோவை டவுன்ஹால் பகுதியில் மளிகைக்கடையில் இருந்து 10 லட்சம் பணத்தை திருடிவிட்டு, கொள்ளை போனதாக நாடகமாடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தெருநாய்கள் கடித்ததில் ஒரு சிறுமி உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள பார்வதி சிலை உட்பட, 11 உலோக சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் சென்னையில் மீட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, கடப்பாரை மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றை கொண்டு,கொள்ளையடிக்க திட்டமிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் 23ஆம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு தொடர்பான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த புழல் அருகே பொங்கலை முன்னிட்டு மகளிர் கூட்டமைப்பினர் நடத்திய, கோலப்போட்டியில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி பங்கேற்றார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி அதிமுக நிர்வாகிகள் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திருச்சியைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.

பிரபல ரவுடி குணா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரிதாக காணப்படும் "கடல் இறகு" என்ற உயிரினம் சென்னை அருகே கடலுக்கு அடியில் அதிகம் காணப்படுகிறது.

கொரோனா பரவல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

Also Read : பொங்கலுக்கு பின் தொடர்ச்சியாக முழு ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை: மா.சுப்பிரமணியன்

நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தயாரிப்பு நிறுவனம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்புவுக்கு, பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபி-யை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று விரிவான உத்தரவை பிறப்பிக்க உள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Must Read : பழனி உண்டியல் வருவாய் ரூ.4 கோடி தாண்டியது..

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் சுகாதாரப் பணிகளை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.

நாடு முழுவதும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகளே இருப்பினும் 92 வயதான அவரது உடல்நலனை கருத்தில் கொண்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருப்பதி திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் மீண்டும் வாகன போக்குவரத்து துவங்கியது.

Read More : திருச்சியில் லாரி உரிமையாளர் கொலை.. தாயே கூலிப்படையை ஏவியது அம்பலம்

உலக அளவில் ஒரே நாளில் 32 லட்சத்துக்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 223 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி தமது முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 223 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. கேப்டன் விராட் கோலி, 79 ரன்கள் எடுத்தார்.

ஐ.பி.எல் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய அணிகள் இணைவதற்கு ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

First published:

Tags: Headlines, Today news, Top News