Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 10, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (ஜனவரி 10, 2022)

தடுப்பூசி

தடுப்பூசி

Tamil News Today : முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  கொரோனா பரவலைத் தடுக்க பொங்கலுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோருக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சென்னையில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜையுடன் முகூர்த்தகால் நடப்பட்டது.

  தமிழ்நாட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால், சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

  ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நூறு சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக, மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஒருநாள் பாதிப்பு 13 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

  மாவட்டங்களைப் பொறுத்தவரை, சென்னையில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. சென்னையில் சனிக்கிழமை 5 ஆயிரத்து 98 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  கொரோனா பரவலால் காரணமாக புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை, அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

  தேர்தல் வேட்புமனு பிரமாண பத்திரத்தில் உண்மை விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சென்னையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் இன்று முதல் 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  இதனால், தன்னை சந்தித்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே அனுமதி அளிக்கப்படுகிறது. திருச்செந்தூரில் பக்தர்களுக்கான தரிசனம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

  திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் பிரவேசத்திற்கு உள்ளூர் பக்தர்களுக்கான இலவச தரிசன டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது.

  மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து உற்சவத்தின் 7-ஆம் நாள் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

  108 வைணவ தலங்களில் 20வது தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை வெகு சிறப்பாக நடைபெற்றது.

  சபரிமலையில் நடைபெற்ற தாயம்பக இசை நிகழ்ச்சி பக்தர்களை பரவசம் அடையச் செய்தது.

  மதுரையில் சாலையில் தனியாக செல்பவர்களிடம் போலீஸ் போல் நடித்து வழிப்பறி செய்த ஒருவரை காவலர் ஒருவர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தார்.

  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தமிழ்நாடு துணை மின் நிலையத்தில் 2 மின்மாற்றிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

  பெரம்பலூர் மாவட்டத்தில் தாயார் சூடு வைத்ததில் காயமடைந்த 10 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  Read More : உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் 13 மடங்கு அதிகரிப்பு...

  கொரோனா பரவல் நிலவரம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாவட்ட அளவில் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

  சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இன்றி தடுப்பூசி சான்றிதழ்களை வழங்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

  முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 12ம் தேதி தொடங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

  Read More : இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாம்... வல்லுனர்கள் கணிப்பு

  சீக்கியர்களின் 10-வது மற்றும் கடைசி குருவான கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி, பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தீபங்கள் ஏற்றப்பட்டு, வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.

  மேகதாது அணை திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் 11 நாட்கள் நடைபயணம் தொடங்கியுள்ளது.

  சைப்ரஸ் நாட்டில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த டெல்டாக்ரான் வைரஸ் பற்றி தற்போதைய சூழலில் அச்சப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

  Must Read : காதலியை பார்க்க சென்ற இளைஞருக்கு சித்ரவதை.. பொள்ளாச்சி நடந்த அதிர்ச்சி சம்பவம்

  இத்தாலியின் மொண்டோவி நகரில் வெப்பக்காற்று பலூன்களின் திருவிழா நடைபெற்றது. வடக்கு இத்தாலியில் பலூன் விளையாட்டுகளின் தலைநகரமாக மொண்டோவி விளங்குகிறது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி