Home /News /tamil-nadu /

இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 3): ஈரோடில் சிறுத்தை அட்டகாசம் முதல் சிலை கடத்தலில் பாஜக நிர்வாகி கைது வரை..

இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 3): ஈரோடில் சிறுத்தை அட்டகாசம் முதல் சிலை கடத்தலில் பாஜக நிர்வாகி கைது வரை..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Tamil News Today : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் பகுதியில் இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் பகுதியில் இன்று இரண்டு ஆடுகளை கொன்று சிறுத்தை அட்டகாசம் செய்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  நம்பியூர் காந்தி நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது. புதன்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை 14,013 ஆக பதிவாகியுள்ளது.

  15 முதல் 18 வயதினருக்கான 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை விரைந்து செலுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

  மருத்துவப் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆயிரத்து 429 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர்.

  சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்டத்தை 2 வாரங்களில் வகுத்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிஐ-க்கு உதவ, தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை வழங்குமாறு மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேல்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், அமமுகவுக்கு குக்கர் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

  ஆம் ஆத்மி கட்சிக்கு துடைப்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், எட்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, சென்னை மாநகராட்சியில் மட்டும் 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

  நகர்ப்புற உள்ளாட்சி தோதலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

  திருச்சி மாநகராட்சி தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி இறுதியானது. 2, 24, 31, 39, 41 வார்டுகள் என, 5 இடங்கள் ஒதுக்கீடு.

  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் 48 பேர் போட்டியிட உள்ளனர்.

  மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான ஆறரை கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

  சீர்காழி அருகே திருநாங்கூரில் 128 ஆம் ஆண்டு 11 தங்க கருடசேவை உத்ஸவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக் கோரி உதகை நீதிமன்றத்தில் வாளையாறு மனோஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.

  கள்ளக்குறிச்சி அருகே அரசுப்பேருந்து படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

  கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அழகாபுரி பகுதியில் மின் இணைப்பு வழங்க சென்ற பணியாளர்களை அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மயிலாடுதுறை நகராட்சியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வந்தவர்களில் குதிரையில் வந்த சுயேட்சை வேட்பாளர் பலரின் கவனத்தை ஈர்த்தார்.

  திருப்பூர் மாநகராட்சி 9வது வார்டில், தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஜோதி மகேஸ்வரி என்பவர், தேர்தல் வைப்பு தொகை 4 ஆயிரம் ரூபாயை 20 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினார்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக போட்டியிடும் பெண் வேட்பாளர் கணவருடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

  தேனியில் அரசு நிலங்கள் மெகா மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் பிரமுகர் நில அளவையர் என மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

  ஓராண்டிற்கு பிறகு தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பிலும் முதலமைச்சர் விசாரிக்க வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த விஜயசாந்தி கூறியிருக்கிறார்.

  திருப்பூரில் கூலி உயர்வு கோரி குதிரை மீது ஏறி விசைத்தறி உரிமையாளர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

  தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் தரமற்ற முறையில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  சிலை கடத்தல் வழக்கில் பாஜக நிர்வாகி, இரண்டு காவலர்கள் உள்ளிட்ட நான்கு பேரை மதுரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

  சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையில் அச்சுறுத்தும் காட்டு யானையால், வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.

  ராமநாதபுரம் நகராட்சியில் வேட்புமனுக்களை யாரும் தாக்கல் செய்ய முன்வராமல் இருந்த நிலையில் நேற்று பாஜக சார்பில் 3 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

  Must Read : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... வேட்புனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் - ஒரே நாளில் 7,590 பேர் மனு தாக்கல்

  புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

  தமிழ் நாட்டில் பாஜகவால் ஆட்சி அமைக்கவே முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

  பிரதமர் மோடி கிட்டப் பார்வை கொண்டவர் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  தேசிய கீதத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகுமாறு மும்பை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

  10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களை கொன்றதாகவும், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்த பிறகே தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

  ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அடிப்படை தேவைகளை வழங்க மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  தமிழ் நாடு மீனவர் பிரச்னைக்கு, நிரந்திர தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியது.

  தொட்டில் குழந்தை திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக எம்பி தம்பிதுரை நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அதி நவீன பிரம்மோஸ் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை மீண்டும் ஒருமுறை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

  மும்பையில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பட்டபகலில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் சுமார் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இன்று, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிம்புவின் பிறந்தநாள்.

  கிரிக்கெட் வீரர் தோனி, நாயகனாக இடம்பிடித்துள்ள Atharva -the origin என்ற கிராபிக் நாவலின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

  Read More : உன் கணவன் என்னைப் பற்றி பேசியது தவறு – சுஜாவுடன் வனிதா வாக்குவாதம்

  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.50 கோடியாக அதிகரித்துள்ளது.

  துபாயில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

  சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  செய்யப்பட்டுள்ளது.

  ‘டெலிவொர்க்கிங்’ முறையில் பணி செய்வதால் முதுகுவலி, மனநல பாதிப்பு, சமூக தனிமை, நிலையான மன உளைச்சல், தனிமை போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

  இலங்கைக்கு இந்தியா ரூ.3,737 கோடி கடன் வழங்க ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

  இங்கிலாந்தில் கடும் புயல் காற்று காரணமாக ஓடுப்பாதையில் விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானில் பறந்து சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

  ஈகுவடார் தலைநகர் குயிட்டோவில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Also Read : IPL 2022: முதல் முறையாக கிறிஸ் கெய்ல் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

  ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க 590 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  விளையாட்டு உலகில் மதிப்புமிக்க லாரியஸ் விருதுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற, இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

  இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் 4 வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி