Home /News /tamil-nadu /

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 2, 2022)

Tamil News Today : இன்றைய முக்கியச் செய்திகள் (பிப்ரவரி 2, 2022)

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

Tamil News Today : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னத்தையும், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

  தமிழ்நாட்டில் திங்களன்று 19,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 16,096 ஆக குறைந்துள்ளது.

  முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய தற்போது அவசியம் இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே 80 சதவிகித மாணவர்கள் வருகை தந்ததாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

  இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

  வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என. அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டு உள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக-வுக்கு குக்கர் சின்னமும், மதிமுக-வுக்கு பம்பரம் சின்னத்தையும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டுயிடும் வேட்பாளர்களின் 5-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இறுதி பட்டியலை அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என பாஜக அறிவித்த நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  டி.என்.பி.எஸ்.சி-யில் ஒரு முறை பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் விவரங்களை வரும் 28ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.

  மணல் விலையை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

  தெரு நாய்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில், தமிழ்நாடு கால்நடைத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

  வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் திருநங்கை கங்கா நாயக் என்பவர் போட்டியிடுகிறார்.

  சென்னையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருந்த திமுக வட்டச் செயலாளர் செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  சென்னை மதுரவாயல் அருகே வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சிறிய வகை சரக்கு வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

  காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான குமரக்கோட்டம் முருகன் கோயிலில் வெள்ளித் தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  ஈரோடு மாவட்டம் கோபி அருகே பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா, விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

  சென்னை குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு, தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியை வைத்து வகுப்பறையை சுத்தம் செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருத்தணியில் அரசுப்பேருந்தை சேதப்படுத்தியதுடன், ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

  நாமக்கல் மாவட்டம் காக்காவேரி பகுதியில், தமிழ் பாப்திஸ்து திருச்சபைக்குச் சொந்தமான கல்லறையை மர்மநபர்கள் அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் மூதாட்டி விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

  காஞ்சிபுரத்தில் உரிய ஆவணங்களின்றி 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. இதையடுத்து பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், அதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

  திருப்பூரில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கான இடப்பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

  Must Read : கூண்டோடு டிரான்ஸ்பர் பண்ணிடுவேன்... பொதுமக்கள் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத போலீசை வாக்கி டாக்கியில் எச்சரித்த காவல் ஆணையர்

  மும்பையில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் இரவு நேர ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

  உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்கால் தொகுதியில் காங்கிரஸ் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளது.

  நாடு முழுவதும் கடைகளுக்கு பயன்படுத்தப்படும் வர்த்தக சிலிண்டரின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 91 ரூபாய் குறைத்துள்ளன.

  வரும் நிதியாண்டில் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு மற்றும் வருமான வரி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை.

  மத்திய நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

  Also Read : TNPSC தேர்வு எழுதும் அனைவருக்கும் முக்கிய அறிவிப்பு

  திமோர்-லெஸ்தே நாட்டில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6 ஆக பதிவாகியுள்ளது.

  உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியாக அதிகரித்துள்ளது.

  ஒமைக்ரானை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்குள் சில நாடுகள் முழு ஊரடங்கு தளர்வுகளை அளித்திருப்பது கவலை அளிப்பதாக உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

  கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது.

  போர்ச்சுகல் நாட்டு பிரதமர் ஆன்டனியோ கோஸ்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ஊரடங்கில் இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி நடத்தியதற்கு போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

  Read More : Union Budget 2022 Highlights மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

  ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க 590 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

  இந்திய வீரர்கள் அஸ்வின், ஷிகர் தவன் உள்ளிட்டோருக்கு அடிப்படை ஏலத் தொகையாக 2 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என, குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி