தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், ஆளுநர் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்ர்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் ஒமைக்ரான் பரவல் அதிகமாகும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்து 731-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை நிறைவடைந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விரிவான அறிக்கையளிக்கிறது விசாரணை குழு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
ஸ்பாக்களில், மசாஜ் நடைபெறும் அறைகளில் CCTV கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகள் திறப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
சென்னையில் 9 வயது சிறுமியை நாய் விரட்டிச் சென்று கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழியில் நடைபெறும், பராமரிப்பு பணி காரணமாக, பல்லவன் விரைவு ரயில் உட்பட, இரண்டு சிறப்பு ரயில்கள், இன்று பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நடத்திய பெண்கள் மாரத்தான் போட்டியில் நிகழ்ந்த நெரிசலால் சிறுமிகள் சிலர் காயமடைந்தனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 24 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இலங்கை திரிகோணமலையில் உள்ள 14 எண்ணெய் கிடங்குகளை 50 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்தத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
உலகளவில் மூன்று லட்சம் கோடி டாலர்களை சந்தை மதிப்பாக கொண்டுள்ள ஒரே நிறுவனமாக ஆப்பிள் உருவெடுத்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிரான்ஸில் பரவத் தொடங்கியது ஒமைக்ரான் திரிபு.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக டெல்லி, கர்நாடக மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், பீகார் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தைப் பொங்கலை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
Read More : Chennai Power Cut: சென்னையில் இன்று (05-01-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!
பொது இடங்களில் முக கவசம் அணிவதில் சிலர் அலட்சியமாக இருக்கும் நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று, பொதுமக்களுக்கு முக கவசத்தை அணிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
Read More : ‘உன் அண்ணனுக்கு நடந்ததுதான் உனக்கும்’ - மழுப்பிய இளம்பெண்ணை தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன்
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே 1 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் தீயிட்டு அழித்தனர்.
Must Read : விமான நிலையத்தில் கள்ள துப்பாக்கியுடன் பிடிபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை, ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Headlines, Tamil News, Top News