• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறுவனின் நுரையீரலில் சிக்கிய பல்; பல நாள் போராட்டத்துக்குப் பிறகு அகற்றம்

சிறுவனின் நுரையீரலில் சிக்கிய பல்; பல நாள் போராட்டத்துக்குப் பிறகு அகற்றம்

சிறுவனின் நுரையீரலில் சிக்கிய பல்

சிறுவனின் நுரையீரலில் சிக்கிய பல்

சிவகங்கையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் விழுங்கிய அவனது பல், நுரையீரலில் சிக்கி பல நாள்கள் போராட்டத்திற்கு பின் மதுரை மருத்துவர்களால் பத்திரமாக நீக்கப்பட்டது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரியாண்டிபுரத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 7 வயது மகன் பாலராகவன். கடந்த ஜூலை 5ம் தேதி ஆடிக் கொண்டிருந்த தனது பல் ஒன்றை சிறுவன் பாலவாசகன் விழுங்கியுள்ளார். மலத்தோடு வந்துவிடும் என்கிற எண்ணத்தில் பெற்றோரும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டனர்.

இந்நிலையில் பால ராகவனுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து ஜூலை 27ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்ததில் சிறுவனின் வலது நுரையீரல் மூச்சுக்குழாயில் பல் அடைத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

Also read: கொரோனாவால் தமிழகத்தில் இதுவரை சுமார் 16 ஆயிரம் குழந்தைகள் பாதிப்பு

இதைத்தொடர்ந்து காது, மூக்கு தொண்டை துறைத்தலைவர் தினகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர முயற்சியில் பிராங்கோஸ்கோபி முறையில் சிறுவனின் நுரையீரல் குழாயை அடைத்து கொண்டிருந்த பல் அகற்றப்பட்டது. தொடர்ந்து நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பூரண குணமடைந்த சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: