ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தி.மு.கவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறியில் ம.தி.மு.க!

தி.மு.கவுடனான தொகுதி பங்கீட்டில் இழுபறியில் ம.தி.மு.க!

வைகோ

வைகோ

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ். விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ம.தி.மு.கவின் பேச்சுவார்த்தைக்குழு உறுப்பினர்கள் வர முடியாத சூழல் ஏற்பட்டதால் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை என்று ம.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் சூழலில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ். விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

  இந்நிலையில், இன்று மதியம் ம.தி.மு.க தொகுதி பங்கீடு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மதியம் 3 மணி அளிவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, அண்ணா அறிவாலயம் வந்தார். ம.தி.மு.கவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

  மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இணைந்து ம.தி.மு.க போட்டியிடும். எங்கள் கட்சியின் பேச்சுவார்தைக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, கணேச மூர்த்தி உள்ளிட்டோரால் வர இயலவில்லை. அதனால், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தமுடியவில்லை.

  நாளை எங்கள் கட்சி பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தபிறகு, நாளை மாலையில் தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டது. கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Lok Sabha Election 2019, Vaiko