திரையரங்குகள் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்குகள் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திரையரங்குகள் திறப்பு பற்றி நாளை அறிவிக்க வாய்ப்பு - அமைச்சர் கடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ
  • Share this:
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நிலையில், மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டது. ஏழு மாத காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதித்துள்ள நிலையில், தமிழக அரசு திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கவேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகின்றனர்.

இந்தநிலையில்,  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘திரையரங்குகள் திறப்பது பற்றி கடந்த 28ந் தேதி தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் மருத்துவக்குழு கண்காணிப்பு கூட்டத்தில் இதுதொடர்பான அறிக்கையும் முதல்வர் பெற்றுள்ளார்.

ஆய்வு செய்து வருவதாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு முடிவு (திரையரங்கு திறப்பு) நாளை வெளிவர வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading