ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்: எல்.முருகன் அறிவிப்பு

எல். முருகன்

எல். முருகன்

கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம் மேற்கொள்வர் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  கொரோனா தொற்று 2வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது.

  இதைத்தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்படவேண்டும் என தமிழக பாஜகவினர் நாளை கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொள்வர் என அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

  மேலும், கொரோனோ காரணமாக தமிழகம் முழுவதும் பாஜகவினர் அவர்களின் வீடுகளிலேயே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  பாஜக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டம் மேற்கொள்ள உள்ளது.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: BJP, L Murugan, Tasmac