ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரித்துபோடப்பட்ட மாவட்டங்கள்.. ஈரோட்டில் அண்ணாமலை.. பால் விலை போராட்டத்துக்கு பக்கா ப்ளான் போட்ட பாஜக!

பிரித்துபோடப்பட்ட மாவட்டங்கள்.. ஈரோட்டில் அண்ணாமலை.. பால் விலை போராட்டத்துக்கு பக்கா ப்ளான் போட்ட பாஜக!

பாஜக போராட்டம்

பாஜக போராட்டம்

ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தவுள்ளனர்.

  பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15ஆம் தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

  அதன் படி நாளை அனைத்து மாவட்டங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

  கட்சியின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டமும் 10க்கும் மேற்பட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் படி 1,100 மண்டலங்கள் உள்ளன. எனவே இந்த மண்டலங்கள் வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

  ALSO READ | ஜி20 மாநாடு.. முக்கிய ஆலோசனைகள்.. இன்று இந்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி!

  சென்னையில் 66 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

  ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Annamalai, BJP, Protest