ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாளை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்... தமிழக அரசு அறிவிப்பு..!

நாளை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்... தமிழக அரசு அறிவிப்பு..!

நாளை பள்ளிகள் இயங்கும்

நாளை பள்ளிகள் இயங்கும்

தீபாவளி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் நாளை இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது . அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளும் நாளை இயங்கும். கடந்த மாதம் 24 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் சொந்த ஊர் சென்று திரும்பி வரும் வகையில் அதற்கு மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதை ஈடு செய்யும் வகையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Also see... சீர்காழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    முன்னதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி வேலை நாட்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அதில், கடந்த ஆண்டுகளைப் போல் இந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட வில்லை. பாடங்களை முழுமையாக நடத்த வேண்டிய கடமை உள்ளது. முன்னதாக, தீபவாளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 19ம் தேதி வரும் சனிக்கிழமை வார விடுமுறைக்கு பதிலாக பணி நாளாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: School, Tamil Nadu