ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் தங்கம் போல உயரும் தக்காளி விலை..

சென்னையில் தங்கம் போல உயரும் தக்காளி விலை..

தக்காளி விலை

தக்காளி விலை

கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வருவது தொடர்பாக, தமிழக வேளாண் துறை செயலாளர் சமய மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வரத்தை விட தேவை அதிகரித்துள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் மழை காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் அளவு 50 விழுக்காடு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து கொண்டிருந்த 600 டன் தக்காளி வரத்து, தற்போது 300 டன் ஆக குறைந்துள்ளது.

அத்துடன், ஒரு மாதத்துக்கு முன்பு தக்காளி கிலோ 10 ரூபாய்க்கும் கீழ் விற்கப்பட்டதால், தென் மாவட்ட விவசாயிகள் வேறு காய்கறிகளை விளைவிப்பதற்கு ஆயத்தமாகினர். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

அதேவேளையில், வரத்தை விட, தேவை அதிகம் உள்ளதால் தக்காளி விலை அதிகரித்துள்ளதாகவும், மேற்கொண்டு இரு வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டு வருவது தொடர்பாக, தமிழக வேளாண் துறை செயலாளர் சமய மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இதுதொடர்பாக, வியாபாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Also read... பாமக தலைவராகிறாரா அன்புமணி ராமதாஸ்?

கூட்டுறவுத் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளின் மூலம், சந்தை விலையை விட, குறைந்த விலையில் தங்காளி விற்பனை செய்யப்படுகிறது. இங்கு, அனைத்து காய்கறிகளும் குறைந்த விலையில் தரமாக விற்கப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். ஒரு கிலோ தக்காளியை 79 ரூபாய்க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

கொடைக்கான‌ல் ம‌லைப் ப‌குதிக‌ளில் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் தக்காளியை தொடர்ந்து, பீன்ஸ் விலையும் 100 ரூபாயை கடந்துள்ளது. டீசல் விலை உயர்வு எதிரொலியால், புனே, சத்தீஸ்கர் உட்பட தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. மேலும், தற்போது வெங்காயத்தை தவிர, எஞ்சிய அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால் விற்பனை மந்தமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Koyambedu, Tomato Price