மீண்டும் உயர்ந்த தக்காளி விலை... கிலோ 5 ரூபாய் உயர்ந்தது

மீண்டும் உயர்ந்த தக்காளி விலை... கிலோ 5 ரூபாய் உயர்ந்தது
  • News18
  • Last Updated: October 3, 2019, 10:50 AM IST
  • Share this:
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று குறைந்து காணப்பட்ட தக்காளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் பெய்த மழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. தினசரி 70 முதல் 80 லாரிகள் வரை வந்த தக்காளி லோடுகள், இரண்டு வாரங்களாக 55 லாரிகளில் மட்டுமே வந்துக் கொண்டிருக்கிறது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வரை 13 ரூபாய் உயர்ந்து காணப்பட்ட தக்காளி விலை நேற்று 8 ரூபாய் குறைந்து விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்த நிலையில், இன்று தக்காளி விலை மீண்டும் 5 ரூபாய் உயர்ந்துள்ளது.


நேற்று 18 ரூபாய் வரை விற்கப்பட்ட நாட்டு தக்காளி இன்று கிலோவுக்கு 5 ரூபாய் உயர்ந்து 23 ரூபாய் வரை விற்கப்படுகிறது

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை நிறைவு பெறும் வரை, இந்த விலை ஏற்றம் நீடிக்கும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Also watch
First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading