ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள்

தங்கத்தோடு போட்டிபோடும் தக்காளி.. கிலோ ரூ.100க்கு விற்பனை..! - கலக்கத்தில் இல்லத்தரசிகள்

த‌க்காளி

த‌க்காளி

நாள்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாகவும் புனே, சட்டீஸ்கர் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வ‌ருவ‌கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18
 • 2 minute read
 • Last Updated :

  வெளிமாநிலங்களில் இருந்து த‌க்காளி வரத்து குறைந்துள்ளதால் கொடைக்கான‌ல் தின‌ச‌ரி சந்தையில் தக்காளி விலை தொட‌ர்ந்து இன்றும் 100-ரூபாய்க்கு விற்ப‌னையாவதால் மக்கள் க‌வ‌லையடைந்துள்ளனர்.

  திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் மலைப்ப‌குதிக‌ளில் விளைய‌க்கூடிய‌ கேர‌ட், பீட்ரூட், ட‌ர்னிப், காலிப்பிள‌வ‌ர், உருளைகிழ‌ங்கு, ப‌ட்டாணி, நூல்கோல், உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ம‌லைக் காய்க‌றிக‌ளையும் த‌ரைப்ப‌குதிக‌ளில் விளையும் த‌க்காளி, க‌த்த‌ரிக்காய், வெண்டைக்காய், பீர்க்க‌ங்காய், அவ‌ரை, வெங்காய‌ம் உள்ளிட்ட‌ காய்க‌றிகளையும் கொள்முத‌ல் செய்து தின‌ச‌ரி காய்க‌றி ச‌ந்தையில் வியாபாரிக‌ள் விற்ப‌னை செய்வ‌து வ‌ழ‌க்க‌ம்.

  இந்நிலையில் நாள்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் டீசல் விலை உயர்வு காரணமாகவும் புனே, சட்டீஸ்கர் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டி வ‌ருவ‌கின்றனர்.

  மேலும், த‌மிழகத்திலும் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதாலும் கொடைக்கான‌லில் உள்ள‌ தின‌சரி  காய்க‌றி ச‌ந்தையில்  தக்காளி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய் முத‌ல் 110 ரூபாய் வ‌ரையிலும் விற்பனை செய்யப்பட்டு வ‌ருவ‌தால் காய்க‌றி வாங்க‌ வ‌ந்த‌ பொதும‌க்க‌ள் க‌வ‌லைய‌டைந்துள்ள‌னர்.

  மேலும் இந்த திடீர் விலையேற்றத்திற்கு தக்காளி கொள்முதல் பொதுவாக‌ குறைந்துள்ள‌துட‌ன்,  ம‌லைப்ப‌குதிக்கு லாரி க‌ட்ட‌ண‌ம் ம‌ற்றும் ஏற்றுக்கூலி இற‌க்கு கூலியும் அதிக‌ம் என வியாபாரிகள் கார‌ண‌ம் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதிலும் குறைந்த‌ அள‌வு ம‌ட்டும் தான் வெளி ச‌ந்தையில் கிடைப்ப‌தால் அதை ம‌ட்டும் கொள்முத‌ல் செய்து த‌ற்போது தின‌ச‌ரி  ச‌ந்தையில்  விற்ப‌னை செய்வ‌தாக‌வும், வெயில், ம‌ழை என‌ கால‌நிலை திடீரென‌ மாறுப‌டுவ‌தால் மொத்த‌மாக‌ கொள்முத‌ல் செய்தால் சில நாட்களில் அழுகி விடுவதால் அதிக‌மாக‌ கொள்முத‌ல் செய்வ‌த‌ற்கு ஆர்வமில்லை எனவும் தெரிவிக்கின்ற‌ன‌ர்.

  Also read... வன்முறை அதிகரிப்பதற்கு படங்களில் வரும் சண்டைக் காட்சிகள் காரணம் - நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

  த‌க்காளி திடீர் விலையேற்ற‌த்தால் த‌க்காளிக‌ளில் செய்ய‌ப்ப‌டும்  உணவுகளுக்கு திண்டாட்டம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. தக்காளி விலையேற்ற‌த்தினால் க‌வ‌லைய‌டைந்துள்ள‌ இல்ல‌த்த‌ர‌சிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ர் மாவ‌ட்ட‌ நிர்வாக‌ம் குறைந்த‌விலைக்கு த‌க்காளி கிடைக்க‌ தோட்ட‌க்க‌லைதுறையின‌ர் மூல‌ம் சிற‌ப்பு ஏற்பாடு செய்து த‌ர‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌வும் கோரிக்கைவிடுத்துள்ள‌ன‌ர்.

  தொட‌ர்ந்து சிலிண்ட‌ர் ம‌ற்றும் த‌க்காளி விலை உய‌ர்வால் ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ரும் க‌வ‌லைய‌டைந்துள்ள‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

  -செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Kodaikanal, Tomato