Home /News /tamil-nadu /

விழுப்புரத்தில் தக்காளியின் விலை வீழ்ச்சி

விழுப்புரத்தில் தக்காளியின் விலை வீழ்ச்சி

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

  • 2 minute read
  • Last Updated :
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே காய்கறி, பழங்களின் விலையைவிட தக்காளியின் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு வீட்டில் தக்காளி சட்னி என்று கூறினாலே ஆச்சரியமாக பார்க்கும் சூழ்நிலை உருவானது. சமூக வலைதளங்களிலும் தக்காளியின் விலை குறித்த செய்திகள்- மீம்ஸ்கள் அதிகமாக வைரல் ஆனது. பல மாவட்டங்களில் இந்த பொருளை வாங்கினால் தக்காளி இலவசம் என்று ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்திருந்தது. தக்காளி அதிகமாக வாங்குபவர் தான் லட்சாதிபதி என்ற நிலையில் நேற்றைய வரைக்கும் இருந்தது.

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கும் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிலோ 120 ரூபாய்க்கும் 150 ரூபாய்க்கும் விற்பனையான தக்காளி , திடீரென 60 ரூபாய் வரை குறைந்தது எப்படி என காரணம் தெரியாமல் வியாபாரிகள் தள்ளாடி வருகின்றனர்.

தக்காளி வியாபாரி மணிகண்டன் இதுகுறித்து கூறுகையில், “ஒரு கிலோ 120 ரூபாய்க்குமேல் விற்பனை ஆகும்போது மக்கள் தக்காளியை சந்தைகளில் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். வியாபாரமும் நல்ல முறையில் நடந்தது. ஆனால், தற்போது 50 ரூபாய் என்ற நிலையிலும் மக்கள் தக்காளி வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.ஒரு தக்காளி ட்ரே குறைந்தபட்சம் 28 கிலோவில் இருந்து 30 கிலோ வரைக்கும் இருக்கும். சென்ற வாரம் ஒரு ட்ரே விலை 2,500 ரூபாய் என்று விற்பனை ஆனது.

தற்போது 1,000 ரூபாய் குறைந்து ஒரு ட்ரே விலை 1500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திடீரென விலை குறைந்த காரணமாக, தக்காளி அதிகளவில் வாங்கி வியாபாரத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடக்கவில்லை.

காரணம் பொதுமக்கள் நேற்று 120 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி இன்று 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்னும் சில நாட்களில், விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று மணிகண்டன் கூறுகிறார்.

மேலும் இந்த விற்பனை பற்றி இன்னொரு வியாபாரி பேபி கூறுகையில், “தக்காளியின் அளவிற்கு ஏற்றார் போல, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெரிய தக்காளி 70 ரூபாய்க்கும், மீடியம் சைஸ் தக்காளி 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. விலை அதிகம் இருக்கும்போது மக்கள் மார்க்கெட்டுகளில் வந்து வாங்கினர். தற்போது விலை குறைவாக இருந்தாலும் மக்கள் சந்தைகளுக்கு வர ஆர்வம் காட்டவில்லை.

இன்று தக்காளி விலை குறைந்துள்ள நிலையில், தெருக்களிலே டாட்டா ஏசி வாகனம் கொண்டு தக்காளியை விற்பனை செய்கிறார்கள். பொதுமக்களும் வீடுகளுக்கு முன்னரே தக்காளியை வாங்கி செல்கின்றனர். இருக்கும் இடத்திலேயே தக்காளியை வாங்கி செல்வதால் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வருகை புரிவதில்லை .மேலும் மார்க்கெட்டுகளில் தக்காளியின் விலை அதிகமாக இருக்குமோ என்று யோசிக்கிறார்களா என்று தெரியவில்லை? விலை குறைந்த நிலையிலும் வியாபாரம் நடக்கவில்லை” என்று கவலையுடன் வியாபாரி கூறினார்.


செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
First published:

அடுத்த செய்தி