• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உச்சத்தில் தக்காளி விலை..! மேலும் அதிகரிக்க வாய்ப்பு

உச்சத்தில் தக்காளி விலை..! மேலும் அதிகரிக்க வாய்ப்பு

தக்காளி

தக்காளி

வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  • Share this:
    அத்தியாவசிய காய்கறிகளில் ஒன்றான தக்காளி, அவ்வப்போது ஏற்ற, இறக்க விலையில் விற்கப்படும். தக்காளி விளைச்சல் அதிகமாகும்போது, கிலோ 2 ரூபாய் என மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும், சில சமயங்களில் தக்காளிகளை செடிகளிலேயே பறிக்கப்படாமல் விட்டு விடுவதுமுண்டு.

    கடந்த வாரம் சென்னையில் நாட்டு தக்காளி கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் தக்காளிகள், அழுகும் நிலை ஏற்பட்டுசந்தைக்கு வரத்து குறைத்துள்ளது.

    Also Read : போலீஸ் மிரட்டியதால் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டு குழந்தை பலி என கணவர் புகார்!

    இதனால் சென்னை கொத்தவால் சாவடியில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 20 ரூபாய் அதிகரித்து 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், பெங்களூரு தக்காளியும் 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    இதனிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கினால் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: