ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பசுமை அங்காடிகள் மூலம் கிலோ ரூ.70க்கு தக்காளி..! - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

பசுமை அங்காடிகள் மூலம் கிலோ ரூ.70க்கு தக்காளி..! - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

 தக்காளி

தக்காளி

Tomato price hike | பசுமை பண்ணை கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தக்காளி விலை கிலோ ரூ.120க்கு உயர்ந்ததையடுத்து, பொதுமக்களுக்கு பசுமை அங்காடிகளில் கிலோ ரூ.70க்கு  வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில் , வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக உள்ளூர் சந்தைகளில் தக்காளியின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போது கிலோ ரூபாய் 120க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். விரைவில் பசுமை அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ | கேரளாவுக்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. தமிழக - கேரள எல்லைப்பகுதியில் காவல்துறை அதிரடி

மேலும் கடந்த ஆண்டு தக்காளி விலை ஏற்றத்தின் போது அரசு விலை குறைத்ததை போல, இந்த ஆண்டும் தக்காளியின் விலை கிலோ ரூபாய் 70 க்கு குறைக்கப்படும் எனவும், இதனை கூட்டுறவு துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பசுமை அங்காடிகளில் விற்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : சங்கர்

First published:

Tags: Tomato