• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு மட்டும் குறைப்பு...!

பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இங்கு மட்டும் குறைப்பு...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • Share this:
    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்க சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்க வசூல் தொங்கியது. மற்ற சுங்கச்சாவடிகளை விட 5 முதல் 15 ரூபாய் சுங்க கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது.

    கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற மே-3 தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வு அமல்படுத்தப்படும் என்றும் பிரதமர் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 20-ம் தேதியிலிருந்து (இன்று) சுங்ககட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி மையத்தில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டண வசூல் தொடங்கியுள்ளது.

    வாலாஜா சுங்கச்சாவடிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழிச்சாலைகள் என்பதால் மற்ற சுங்கச்சாவடிகளை விட 5 முதல் 15 ரூபாய் வரை கார் லாரி பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு ஏற்ப வசூல் கட்டணம் குறைவாக பெறப்படுகிறது என்று வாலாஜா சுங்கச்சாவடி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.

    வெளிமாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களிலிருந்தும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் சுங்கச் சாவடியை கடந்து செல்லும் இதர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: