• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன்

டோக்கன்களை பெருவதற்காக வரிசையில் காத்திருக்கும் காளையின் உரிமையாளர்கள்

டோக்கன்களை பெருவதற்காக வரிசையில் காத்திருக்கும் காளையின் உரிமையாளர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
    மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் வரும் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பங்கேற்கும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

    இந்நிலையில் பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    டோக்கன்களை பெற அதிகாலை 5 மணி முதலே காளைகளின் உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அதில் காளைகளைப் பரிசோதித்ததற்கான மருத்துவ சான்றிதழ்கள், காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டை போன்ற விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

    இன்றைய தினம் 700 பேருக்கு டோக்கன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனிடையே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான முகூர்த்த கால் நடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் குழு அமைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

    இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் வீரவிளையாட்டு மீட்புக் கழக மாநில செயலாளர் ராஜேஷ் உட்பட 14 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: